election2021

img

ஒரே நாடு... ஒரே ரேஷன்.... தமிழகம் ஆகும் சுடுகாடு.....

‘உணவு விநியோகம் போன்ற அடிப்படையான விஷயங்கள் எவ்வளவுக்கெவ்வளவு மையப்படுத்தப்படாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மக்களால் பயனடைய முடியும்’ என ஐ.நா அமைப்பு வலியுறுத்துகிறது. ஆனால், இந்தியாவிலோ பாஜக அரசாங்கம் மத்திய அரசின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டில் பொது விநியோகத்தைக் கொண்டு வரத் திட்டமிடுகிறது. 

மாநிலத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு இருக்கும் ஒரு சில மாநிலங்களில், இன்றைக்குத் தமிழ்நாடும் ஒன்றாக இருக்கிறது. விலையில்லா அரிசி போன்ற திட்டங்கள் அமலில் இருப்பதால், ஏழை, எளிய மக்களின் உணவு பெறும் உரிமை தமிழகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது; பட்டினிச் சாவை காணும் நிலையில் இன்றைக்குத் தமிழகம் இல்லை. 

ஜார்கண்ட் மாநிலத்தில் கோலி தேவி என்ற தலித் பெண், தன்னுடைய 11 வயது மகளை பட்டினிக்கு பலி கொடுத்தார். ஆதார் அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க முடியாமல் போனதால், அவரது ரேஷன் அட்டையை அரசாங்கம் ரத்து செய்துவிட்டது. உணவுக்கு வழியின்றி அவரது குழந்தை 8 நாட்கள் பட்டினியால் மடிந்தது. உணவு உரிமைக்கான போராளிகள் கோலி தேவியை மனுதாரராகக் கொண்டு வழக்கை நடத்தியபோது, நாட்டில் 4 கோடி ஏழை, எளிய, தலித், ஆதிவாசி மக்களுக்கு ஆதார் கார்டை இணைக்க முடியாத காரணத்தால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில், மத்திய அரசும் மற்றும் அந்தந்த மாநில அரசுகளும் ரேஷன் அட்டைகள் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யாததால், பட்டினிச் சாவுகள் அங்கு நிகழ்கின்றன. 

இந்த லட்சணத்தில்தான், மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் திணிக்கப் பார்க்கிறது. வேளாண் சட்டங்களால் அரசு கொள்முதல் நடக்காமல், பொது விநியோக முறை அடிவாங்கப்போகும் நிலையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் பட்டினிச் சாவுகளைக் கண்டிராத தமிழகம் போன்ற மாநிலங்களையும் கடுமையாகப் பாதிக்கும்.

;