election2021

img

பாஜக விளம்பரத்தில் என் படமா? தாமரை மலரவே மலராது...

தமிழக பா.ஜ.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் விளம்பரத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் படத்தைப் பயன்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.கவின் தேர்தல் விளம்பரத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகளும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான, ஸ்ரீநிதியின் பரதநாட்டிய காட்சியைப் பயன்படுத்தியுள்ளனர்.உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக கலைஞர் எழுதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், கௌதம் வாசுதேவ்இயக்கத்தில் உருவான “செம்மொழி யான தமிழ்மொழியே” பாடலுக்காக எடுக்கப்பட்ட வீடியோவில் இடம்பெற்ற ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் பரதநாட்டிய காட்சியைத்தான் தங்களதுவிளம்பரத்திற்காகப் பயன்படுத்தி யுள்ளது பா.ஜ.க.காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவி இடம்பெற்ற காட்சியை அவர் ஒப்புதலின்றி தேர்தல் விளம்பரத்தில் பயன்படுத்தி, “தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்” என சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தது தமிழக பா.ஜ.க.இதைக் குறிப்பிட்டு பத்திரிகை யாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட தும், கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து பதிவிட்டுள்ள ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் “பா.ஜ.கவின் தேர்தல் விளம்பரத்துக்காக எனது புகைப் படத்தை பயன்படுத்தியது அபத்தம். தமிழகத்தில் தாமரை என்றும் மலராது” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ள பதிவில், “ஒப்புதல் பெறுவதென்பது உங்களுக்குப் புரிந்து கொள்ள கடினமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் திருமதி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் படத்தை அவரது அனுமதியின்றி நீங்கள் பயன்படுத்த முடியாது. உங்கள் பிரச்சாரம் பொய்களால் நிரம்பியுள்ளது என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்” எனக் கிண்டல் செய்துள்ளனர்.

;