election2021

img

தமிழின் மீதான மோடியின் அக்கறை எங்களுக்குத் தெரியாதா?

தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடிக்கு தமிழ்மொழியின் மீதான பாசம் பொங்கி வழிகிறது. தேர்தலுக்காக பசப்பும் உங்கள் டகால்டி வேலையெல்லாம் தமிழக மக்களுக்குத் தெரியும். வெறும் 5 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்திற்கு 622 கோடி ரூபாய் ஒதுக்கும் நீங்கள், உலகம் முழுவதும் 7.5 கோடி பேர் பேசும் மொழியான தமிழ்மொழிக்கு வெறும் ரூ. 22 கோடி மட்டுமே ஒதுக்குவது ஏன்? தமிழ்மொழியின் மீது அவ்வளவு அக்கறை காட்டும் நீங்கள் தமிழில் அர்ச்சனை செய்ய உத்தரவிடுவீர்களா? சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாட அனுமதிப்பீர்களா? உங்கள் புளுகுனி ஆட்டத்தையெல்லாம் தமிழக மக்கள் ஒருபோதும் ரசிக்க மாட்டார்கள்.

கந்தர்வகோட்டை சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரையை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு பேசியதிலிருந்து…

;