election2021

img

வாக்குச் சேகரிக்க செல்லுமிடங்களில் அமைச்சர் சீனிவாசனை பெண்கள் முற்றுகை.....

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் வாக்குச்சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட வனத்துறை அமைச்சர் சீனிவாசன் செல்லுமிடங்களில் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து,  முற்றுகையிட்டனர். 

எம்.வி.எம். கல்லூரி அருகில் உள்ள பாலதிருப்பதி பகுதியில் நூற்றக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மாநகராட்சிக்கு உட்பட்ட  இந்த பகுதிக்கு இதுவரை வனத்துறை அமைச்சரோ, மாநகராட்சி நிர்வாகமோ எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. கடந்த முறை ஓட்டுக்கேட்க வந்த வனத்துறை அமைச்சர் இந்த முறைதான் வந்திருக்கிறார் என்பதால் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 1-வது வார்டு அய்யன்குளம் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் மக்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் அந்த பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற வனத்துறை அமைச்சரை பெண்கள் சூழ்ந்து கொண்டு  முற்றுகையிட்டனர். பின்னர் வீடுகளை காலி செய்யமாட்டோம் என்ற உத்தரவாதத்தை அமைச்சர் தந்த பிறகு பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.

;