election2021

img

அமைச்சரை கீழே இறக்கிட்டோம்ல.... (கோவில்பட்டி தொகுதி ஸ்பெஷல்)

கோவில்பட்டி தொகுதியில் வீட்டுக்கு வீடு ஊதா நிறகுழாய்களும் தண்ணீருக்காக காத்திருக்கும் தொட்டிகளுமே அமைச்சர் கடம்பூர் ராஜுவை வரவேற்க காத்திருக்கின்றன.இத்தனை நாட்களும் தனது சொகுசு காரில் பவனி வந்த அமைச்சர் கடம்பூர் ராஜு நிலத்தில் கால் பதித்து வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க வேண்டிய நிலையை சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசன் ஏற்படுத்தியுள்ளார். தெருக்களில் இறங்கி வீட்டு வாசல்களுக்கு செல்லும் அமைச்சர் தனது சாதனையாக கூறிவரும் குடிதண்ணீர் பிரச்சனை எந்த அளவுக்கு கடுமையானதாக உள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது. 

வியாழனன்று மாதாங்கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஓட்டு கேட்டு சென்றபோது கடந்த ஓராண்டு காலமாக தண்ணீரே தராமல் வரி மட்டும் வசூலிப்பதாக தெரிவித்தனர். அங்கிருந்து நகராட்சி ஆணையரை செல்பேசியில் தொடர்பு கொண்டபடி நழுவ வேண்டிய நிலை அமைச்சருக்கு ஏற்பட்டது.  அமைச்சரின் தற்போதைய நிலை குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் பி.சுகந்தி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவு:‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் கே. சீனிவாசன் அவர்களுக்கு   சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்திற்கு ஆதரவு பெருகுவதைக் கண்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பயந்து போய் உள்ளார். இறுமாப்  போடு,  சொகுசு காரிலேயே பவனி வந்தவர்,  இப்போது தரையில் இறங்கி நடந்து வந்து வாக்கு கேட்டு வருகிறாராம்.  எப்படியோ அதிமுக முன்னாள் அமைச்சரை கீழே இறக்கி ட்டோம்ல?’’

;