election2021

img

தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழில் பாதுகாக்கப்படும்,.... தொகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்... கோவில்பட்டி சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் உறுதி....

மதுரை:
கோவில்பட்டி தொகுதியில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டச் செயற்குழுஉறுப்பினர் சீனிவாசன் போட்டியிடுகிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சீனிவாசன் தீக்கதிருக்கு அளித்த பேட்டி: கோவில்பட்டியின் பிரதான தொழிலான தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும். ஏற்கனவே  தீப்பெட்டிக்கான “வாட்” வரியை ரத்து செய்ய தீப்பெட்டி உற்பத்தியாளர்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வாட் வரியை நீக்கியது. 

நான் வெற்றி பெற்றுச் சென்று தீப்பெட்டி தொழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப் பாடுபடுவேன். தீப்பெட்டிக்கான மூலப்பொருளை மாநில அரசே மானிய விலையில் வழங்கவேண்டுமென வலியுறுத்தப்படும். கடலை மிட்டாய் தயாரிப்பு கோவில்பட்டியில் பிரபலமானது. கடலை மிட்டாய் தொழிலை பாதுகாக்கவும், அவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டி நகரில் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் மூலம் இரண்டாம்கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. கோவில்பட்டி தொகுதி முழுவதும்சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும். தொகுதி முழுவதும்அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நமது சிறப்பு நிருபர்

;