election2021

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்....

சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் சனிக் கிழமையன்று (மார்ச் 13) வெளியிடப் பட்டது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் மார்ச் 13 அன்று  மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன்,அ.சவுந்தரராசன், உ.வாசுகி மற்றும் மாநிலசெயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.சிபிஐ (எம்) போட்டியிடும் வேட்பாளர் கள் விபரம்:

1.     கீழ்வேளூர் (தனி) - நாகை மாலி முன்னாள் எம்எல்ஏ

2.     திருப்பரங்குன்றம் - எஸ்.கே.பொன்னுத்தாய்                

3.     கோவில்பட்டி - கே. சீனிவாசன்

4.     கந்தர்வக்கோட்டை (தனி) - எம்.சின்னதுரை

5.     அரூர் (தனி) - ஏ.குமார்

6.     திண்டுக்கல் - என்.பாண்டி

ஆகியோர்களை வேட்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

                                             ********************

சிபிஎம் - தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மக்கள் பேராதரவு அளிக்க வேண்டும் : கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மற்றும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மக்கள் பேராதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை சனிக்கிழமையன்று (மார்ச் 13) சென்னையில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், அதிமுக அணியை படுதோல்வி அடையச் செய்து திமுக தலைமையில் புதிய ஆட்சி பதவியேற்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மக் கள் பேராதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.இதன் பின்னர் செய்தியாளர் களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை ஓரிருநாட்களில் வெளியிடப்படும். திமுகமற்றும்  சிபிஎம் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை முன்னிறுத்தி பிரச்சாரத்தை மேற்கொள்வோம். மார்க் சிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் ஏற்கெனவே தமிழகத்தில் ஒருசுற்று பிரச்சாரம் செய்துள்ளனர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்மாணிக் சர்க்கார், பிரகாஷ் காரத்,பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் சிபிஎம் மற்றும் கூட்டணிக் கட்சி
வேட்பாளர்களை ஆதரித்து மீண்டும் பிரச்சாரம் செய்வார்கள் என்றார்.சிபிஎம் வேட்பாளர்கள் அவரவர் வசதிக்கேற்ப வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று குறிப்பிட்ட பாலகிருஷ்ணன், துணை முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல் செய்யும் அறையில் நிறைய பேர் கூடியிருந்தனர். 

ஆளும் கட்சியினர் தேர்தல் விதிமுறைகள்,கட்டுப்பாடுகளை மதிக்காமல் செயல்படுவார்கள். அவர்கள் மீது வழக்கும் பதியமாட்டார்கள். எதிர்க் கட்சி வேட்பாளர்கள் சிறு தவறு, விதிமீறல் செய்தாலும் வழக்கு போடுவார்கள். விதிமுறைகளை மீறித்தான் செயல்படுவோம் என்பதாக அவர்களது தொடக்கம் அமைந்துள்ளது என்றார்.திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என்று முதலமைச்சர் கூறுகிறார். அப்படியானால், மாதம் 1500 ரூபாய்பணம், 6 சிலிண்டர் என்ற அதிமுக அறிவிப்பை எப்படி நிறைவேற்றுவார்கள். கஜானாவை காலி செய்துவிட்டோம், திமுக எப்படி திட்டங்களை நிறைவேற்றும் என்று ஒரு வேளை நினைத்து முதலமைச்சர் கூறியிருப்பார். தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள திமுக அதற்கான திட்டமிடலோடுதான் அதை செய்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது. அதற்கு தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று குறிப்பிட்ட பாலகிருஷ்ணன், அதிமுக- பாஜக அணி அனைத்து விதமானமுறைகேடுகளிலும் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனை திமுக கூட்டணிக்கட்சிகள் முறியடிக்கும் என்றார்.கோவில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல. பண்பாடு, கலாச்சாரம், கலை பொக்கிஷம். எந்த அடிப்படையில் தனிநபர்களிடம் கொடுப்பது. இப்படி கூறுவது பொருத்தமற்றது. கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் அவை பாதுகாப்பாக உள்ளன. இறைநம்பிக்கை உள்ள பக்தர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலங்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அவற்றை பாதுகாப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.இந்த செய்தியாளர் சந்திப்பின் போதுஅரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், பி.சம்பத் மற்றும் வேட்பாளர்கள் உடனிருந்தனர்.

மேற்கண்ட செய்தி தொகுப்பு 1-ஆம் பக்கம் மற்றும் 5-ஆம் பக்கம் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் 2 தொகுப்பும் ஒரே தொகுப்பாக உள்ளது (கே.பாலகிருஷ்னன் பேட்டி மட்டும்).   

 

;