election2021

img

சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு நிலைமை....

$  இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். ஆட்சியில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. 

$  ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தையே தொலைக்காட்சி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றார் முதல்வராக இருந்த இ.பி.எஸ். இத்தகைய கொடுமையை கேள்விப்பட்டதுண்டா? 

$ சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.  

$   பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டது ஊரறிந்த இரகசியமாக ஆனது. 

$   இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இதேபோல் ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது அம்பலமானது.

$    காவல்துறையில் உள்ள பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை எனும் கொடுமையான சம்பவம் நடந்ததும் தமிழகத்தில்தான்! 

$    தலித் மக்கள் மீது தாக்குதல் அதிகரித்தது. 

$   ஏராளமான ஆணவக் கொலைகள் நடந்தன.     இந்த அனைத்து சம்பவங்களிலும் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்.ஆட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீண்ட போராட்டங்கள் அல்லது நீதிமன்றங்களின் தலையீடுக்கு பின்னர்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆட்சியாளர்களின் மெத்தனம் குற்றவாளிகளுக்கு மேலும் ஊக்கமும் தைரியமும் கொடுத்தது. 

$  2018 ஆம் ஆண்டு தென் மாநிலங்களில் தமிழகத்தில்தான் அதிகமான விசாரணை கைதிகள் உயிரிழந்துள்ளனர். 65 பேர் நீதிமன்ற காவலில் இருந்த பொழுதும் 11 பேர் காவல்துறை விசாரணையின் பொழுதும் இறந்துள்ளனர். அதாவது கொல்லப்பட்டுள்ளனர். 

$   2019-20 ஆம் ஆண்டுகளில் 69 விசாரணை கைதிகள் இறந்துள்ளனர். 57 பேர் நீதிமன்ற காவலில் இருந்த பொழுதும் 12 பேர் காவல்துறை விசாரணையின் பொழுதும் இறந்துள்ளனர். 

 வேலியே பயிரை மேய்ந்த கதையாக சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்களே சட்டத்தின் ஆட்சியை சிதைத்தனர். மகாபாதகம் செய்த ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தனர். 

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சிதைத்த இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். ஆட்சியை தூக்கி எறிவோம்! 

ஆட்சி மாற்றம் நிகழட்டும்! 

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை சீரடையட்டும்!

தொகுப்பு : அன்வர் உசேன்

;