election2021

img

சமத்துவபுரத்திலிருந்து வாக்காளர் சந்திப்பை துவக்கினார் கோவில்பட்டி சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசன்.... செல்லும் இடமெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு....

கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசன் ஞாயிறன்று (மார்ச் 21) வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பைத் தொடங்கினார்.

முதல் நிகழ்ச்சியாக கோவில்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட லிங்கம்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு வேட்பாளர் கே.சீனிவாசன் மாலை அணிவித்தார். அப்போது அவருடன் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், திமுக ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பாபு,திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரேஸ்வரி,பாரதி ரவிகுமார், இலுப்பையூரணி ஊராட்சிமன்ற தலைவர் செல்வி சந்தானம், திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சி.சூர்யராஜ், மதிமுக மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் சி.சரவணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம், விசிக ஒன்றிய செயலாளர் மாடசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.ராமசுப்பு, காங்கிரஸ் ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.

சமத்துவபுரத்தில் நுழைந்ததும் அங்குள்ள பெண்கள் திரளாக வந்து வேட்பாளர் கே.சீனிவாசனுக்கு ஆரத்தி எடுத்தும் குலவையிட்டும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.  அங்கிருந்து திறந்த வாகனத்தில் ஏறி இருகரம் கூப்பி தனது வாக்காளர் சந்திப்பு பயணத்தை கே.சீனிவாசன் தொடங்கினார். தாமஸ்நகரில் திமுக செயலாளர் அழகுராஜ், ராஜதுரை, கருப்பசாமி, காங்கிரஸ் கட்சி இமானுவேல், ரமேஷ் மூர்த்தி, கிளை செயலாளர் ராபின்சன், விடுதலை சிறுத்தைகள் பிரபாகரன், பிரேம்குமார், சிபிஐ நஞ்சம்மாள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் வரவேற்பளித்தனர்.கூசாலிப்பட்டியில் திமுக கிளை செயலாளர் கள் மு.குமார், மு.பன்னீர் செல்வம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜன், திமுக மகளிரணி நிர்வாகி ரதிவேல், காங்கிரஸ் கட்சியின் அய்யாசாமி, மாடசாமி, செல்வம், மதிமுக கிளை செயலாளர் விண்ணரசுஉள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். விஸ்வநாததாஸ் காலனியில் ராமகிருஷ்ணன், செல்வம், மாடசாமி நாகலிங்கம், மாரிமுத்துஇளைஞரணி (திமுக) மற்றும் கூட்டணிகட்சியினரும் பொதுமக்களும் வரவேற்பளித்த னர். குலசேகரபுரத்தில் திமுக கிளை செயலாளர்கள் பேதுரு செல்வம், குருசாமி, சிபிஐலெனின், சிபிஎம் லிங்கப்பன், மதிமுக நல்லசாமி, ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் (மதிமுக), தொழிலதிபர் மாரியப்பன் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.

லிங்கம்பட்டி புதுக்காலனியில்  திமுக கிளை செயலாளர் மாரியப்பன் , முன்னாள் செயலாளர் எஸ்.மாரியப்பன், டெய்லர் ஜெயபால், விசிக அசோக், ரதுமேன், காங்கிரஸ் கட்சி நீதிராஜ் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். இதுபோல் பெருமாள்பட்டி, வடக்கு இலுப்பையூரணி, மறவர் காலனி, சண்முக நகர், லாயல்மில் காலனி, ஆசிரியர் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சியினரும் பொதுமக்களும் வேட்பாளர் கே.சீனிவாசனுக்கு வரவேற்பளித்தனர்.

;