election2021

கே.பாலகிருஷ்ணன் பேட்டி... 1 ஆம் பக்கத் தொடர்ச்சி....

 1 ஆம் பக்கத் தொடர்ச்சி.... 

நிச்சயம். பாஜக மீது தமிழகவாக்காளர்களுக்கு இருக்கும் கடுமையான கோபத்தால் அவர்கள் டெபாசிட் இழப்பார் கள். இவ்வாறு அவர் கூறினார்.

பண பலம், சாதி பலம் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், “கோவில் பட்டி தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் நிச்சயமாக வெற்றி பெறுவார். அவரைஎதிர்த்து நிற்கும் வேட்பாளர்களில் ஒருவர் 2 முறை வெற்றிபெற்று அமைச்சரான பிறகும்குடிதண்ணீர் பிரச்சனைக்கே தீர்வு காணவில்லை. 

அவர் செய்தித்துறை அமைச்சராக அந்த துறைக்குஎன்ன செய்தார்? திரையரங்கில் திருட்டு டிக்கட் விற்பனையை தடுக்கவோ, திருட்டு விசிடியை தடுக்கவோ அவரால் முடியவில்லை. இது எவ்வளவு பெரிய மோசடி. சினிமா டிக்கட்டில் 18 சதவிகிதம் வரிபோடுகிறார்கள். சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் அடித்து கொல்லப்பட்டார்கள். அது லாக்கப் மரணம் இல்லைஎன்று இந்த அமைச்சர்தான் முதலில் கூறினார். இப்போது உயர்நீதிமன்றம் அறிவித்த சிபிஐ விசாரணையில் லாக்கப் மரணம் என்பது உறுதியாகி சிலர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். அமைச்சர் கூறியது உண்மையா? நீதிமன்றம்கூறியிருப்பது உண்மையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.   

குறிப்பிட்ட சாதி ஓட்டுகளைப் பெற்று ஒருவர் வெற்றிபெற்றுவிட முடியாது. அதுபோன்ற அவர்களது முயற்சி எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். மற்றொருவர் டிடிவி. இவர் ஆர்.கே.நகரில் நன்றி சொல்லக்கூட போகாதவர். வேறு எங்கும் போட்டியிட முடியாததால் இங்கே வந்து நிற்கிறார். அவருடன்ஒரு அணியோ ஆதரவோஇல்லை. நிச்சயமாக தமிழ் நாடு முழுவதும் வீசும் திமுக கூட்டணிக்கான ஆதரவு அலை கோவில்பட்டியிலும் வீசுகிறது. சீனிவாசன் மகத் தான வெற்றி பெறுவார்” என்றுகே.பாலகிருஷ்ணன் கூறினார்.  பேட்டியின்போது திமுகபொதுக்குழு உறுப்பினரும் தொகுதி பொறுப்பாளருமான  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா, நகரச் செயலாளர் கருணாநிதி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன்,நகரச் செயலாளர் ஜோதிபாசு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் காமராஜ், வட்டாரத் தலைவர் ரமேஷ் மூர்த்திஉள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;