election2021

img

தமிழக சட்டமன்ற தேர்தல் : தமாகாவுக்கு ‘கல்தா’

அதிமுக-பாஜக-பாமக கூட்டணியில் தமிழ் மாநிலகாங்கிரசுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதிலும் கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த மீண்டும் தனியாககட்சி தொடங்கிய ஜி.கே.வாசனுடன்பயணித்து வந்தவர் முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம். ஏற்கெனவே இரண்டு முறை இந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற அவர்,இந்த முறை அதிமுக கூட்டணியில் வால்பாறை தொகுதி கிடைத்துவிடும் என்று காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அதிமுக அந்த தொகுதியை கொடுக்கவில்லை. எனவே,வால்பாறை பகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுத் தாக்கல்செய்திருக்கும் கோவை தங்கம்,தமாகாவிலிருந்தும் வெளியேறியிருப்பதால், அந்த தொகுதியில் அதிமுகவின் தோல்வி உறுதியாகி விட்டது.

;