election2021

img

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலை....  

சென்னை 
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேளூர், கந்தர்வகோட்டை, அரூர், திண்டுக்கல், திருப்பரங்குன்றம், கோவில்பட்டி ஆகிய தொகுதியில் போட்டியிட்டது.

இந்த 6 தொகுதிகளில் கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் நாகை மாலி, கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். மற்ற 4 தொகுதிகளில் கடும் இழுபறியாக உள்ளது.இதில் கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் நாகை மாலியின் வெற்றி ஏறக்குறையாக உறுதியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

;