election2021

img

தண்ணீர் தாருங்கள் அமைச்சரே... வாஷிங் மிஷன் அப்பறம் பார்க்கலாம்.....

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் குடும்ப பெண்களை சந்தித்தபோது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து அவர்கள் கோபம்கொப்பளிக்க கூறிய வார்த்தைகள், ‘தண்ணீர் தராம வாஷிங்மிஷன வச்சு என்னத்த செய்ய, முதல்ல தண்ணிய கொடுங்க - வாஷிங் மிஷன் அப்பறம் பாக்கலாம்.’கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.  சங்கத்தின் மாநில செயலாளர் பி.சுகந்தி இது குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்:  ஜனநாயக மாதர் சங்கத்தின் 50 முன்னணி ஊழியர்கள்பத்து குழுக்களாக கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார்கள்.  நிர்வாகிகள் ஜான்சிராணி, பூமயில், மல்லிகா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் தலைமையில் இந்த வாக்காளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த பகுதியில் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கும் போராட்டத்தில் சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசனுடன் இணைந்து செயல்பட்டு வரும் மகாலட்சுமி, கிருஷ்ணவேணி போன்றவர்கள் வேட்பாளர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள். தொழிலாளர்களும், குடும்பத் தலைவிகளும் தங்கள் குறைகளையும் அரசியல் கருத்துகளையும் சகஜமாக தெரிவிக்கிறார்கள். தீப்பெட்டி தொழிலை பாதுகாக்காத மத்திய- மாநில அரசுகளுக்கு எதிரானஆலைகள் முடக்கம் அவர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தினாலும் இதை தவிர வேறுவழியில்லை என்றார்கள்.

பெரும்பாலான இடங்களில் குடிதண்ணீர் கிடைக்கவில்லை. டேங்கர் தண்ணீரை குடம்  பத்து ரூபாய்க்கு வாங்கிபயன்படுத்தும் அவலநிலையை தெரிவித்தனர். குடும்பவருவாய் குறைந்துள்ள நிலையில் விலைவாசி உயர்ந்துகொண்டே இருப்பது குறித்து கவலை தெரிவித்தனர். பிஜேபிகூட சேர்ந்ததால் அமைச்சர் கடம்பூர் ராஜு மக்களைநம்புவதைவிட தந்திரம், மந்திரம், எந்திரத்ததான் நம்பறாரு,என்று ஆச்சரியப்படுற மாதிரி அரசியல் பேசுறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும்  இந்த கூட்டங்களில் பங்கேற்பதால் காரசாரமான அரசியல் விவாதமாக இந்த வாக்காளர் சந்திப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

;