election2021

img

கோமா நிலைக்கு தள்ளப்பட்டவனுக்கு மயக்க ஊசி போட்ட மோடி....

தாராபுரத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘கொங்கு மக்கள் செல்வத்தைச் சேகரிப்பவர்கள், வியாபார நேர்த்தி கொண்டவர்கள், தொழில் நேர்த்தி கொண்டவர்கள், அளவிட முடியாத கருணை உள்ளம் கொண்டவர்கள், அவர்களின் சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு நிறைய உதவிகள் செய்யும், உங்கள் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதியாக இருப்போம்’ என்று பேசியிருக்கிறார்.மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… ஏழு வருடங்களாகப் பிரதமராக இருக்கிறீர்களே… அவர்களுக்கு என்ன செய்தீர்கள்? அதைப் பட்டியல் போட்டுச் சொல்லும் அருகதை, யோக்கியதை உங்களுக்கு இருக்கிறதா? உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும் அல்லவா…!சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு இந்தக் கொங்கு மண்டலம் பெயர் போனது என்று சொல்கிறீர்கள். அந்த வளர்ச்சிக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறீர்களா?

நான் இதைப்பற்றி இந்தக் கொங்கு மண்டலத்தில் இருக்கும் சிலரை கேட்டேன். அவர்கள், மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் சிறு, குறு தொழில் நலிந்து நாசமாகிச் சிதைந்து போய்விட்டது என்று சொன்னார்கள்.உதவி என்ற பெயரால் எதையும் மோடி செய்யாமல் இருந்தாலே போதும், தொழில் வளர்ந்துவிடும். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் பெருந்தொழில் நிறுவனங்களும், சிறு - குறு தொழில் நிறுவனங்களும் முடங்கி விட்டன.அதாவது 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் பொருளாதாரக் கொள்கையில் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு இந்த பா.ஜ.க. அரசு கொண்டு சென்றுவிட்டது.

1,000 ரூபாய் நோட்டு செல்லாது,500 ரூபாய் நோட்டு செல்லாது என்றுபிரதமர் மோடி அவர்கள் திடீரென்று ஒருஇரவில் அறிவித்தார். அவர் அறிவித்த பிறகு ‘அற்புதமான அறிவிப்பை பிரதமர்செய்திருக்கிறார். இந்தியாவே தலை கீழாக மாறப்போகிறது. இந்திய நாட்டின்பொருளாதாரச் சுதந்திரம் எப்படி எல்லாம் மாறப்போகிறது என்பதைப் பாருங்கள்’ என்று எல்லாப் பத்திரிகை களையும் ஊடகங்களையும், கட்டாயப் படுத்தி எழுத வைத்தார்கள், ஒளி பரப்பினார்கள்.ஆனால் என்ன நடந்தது? அதுவரை இருந்த தொழில்கள், அது மிகப்பெரிய தொழில் நிறுவனமாக இருந்தாலும், சிறு – குறு தொழில் நிறுவனமாக இருந்தாலும், அவை அனைத்தும் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது. அதாவதுகோமா நிலைக்குத் தள்ளப்பட்டவனுக்கு மயக்க ஊசி போட்டால் எப்படி இருக்கும், அதுபோலத்தான் மோடியின் பொருளாதாரக் கொள்கை அமைந்தது என்று அந்த நண்பர்கள் என்னிடத்தில் சொன்னார்கள்.

அடுத்து ஜி.எஸ்.டி. என்று ஒரு வரியைப் போட்டார்கள். கந்துவட்டி வரி வசூலுக்கு இன்னொரு பெயர்தான் ஜி.எஸ்.டி. வரி. வரியைச் சீரமைக்க வேண்டும் என்று சொல்லிதொழில்துறையைச் சீரழித்துவிட்டார்கள்.

பிரச்சாரக் கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகளிலிருந்து.. 

;