election2021

img

விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்த பழனிசாமி.... நெல்லை, திருமங்கலம், உத்திரமேரூர் பிரச்சரத்தில் மு.க.ஸ்டாலின் கண்டனம்....

முதலமைச்சர் பழனிசாமி, தேர்தல் அறிக்கையில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து அ.தி.மு.க. குரல் கொடுக்கும் என்று திடீர் ஞானோதயம் வந்தது போல, விவசாயிகளை ஏமாற்றுவதற்காக அந்த அறிவிப்பைச் சொல்லியிருக்கிறார்.
இதே முதலமைச்சர் பழனிசாமி, இந்தச் சட்டத்திற்கு எதிராக நாம் போராடிய நேரத்தில், “ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியாது” என்று சொன்னார். அவருக்குத்தான் விவசாயம் தெரியுமாம்.

அவர் அடிக்கடி எங்கு சென்றாலும் நான் ஒரு விவசாயி, நான் ஒரு விவசாயி என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு ரவுடிதான் தன்னை அடிக்கடி ரவுடி, ரவுடி என்று சொல்லுவான்.அது மட்டுமல்ல; போராடுகின்ற விவசாயிகளைப் பார்த்துக் கொச்சைப் படுத்திப் பேசினார். இன்றைக்கும் தில்லியில் 120 நாட்களைக் கடந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் குடும்பம் குடும்பமாக, கடும் பனியைக்கூடப் பொருட்படுத்தாமல், வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல், மழையைச் சிந்தித்துப் பார்க்காமல், தில்லியில் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அவ்வாறு போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்த்து முதலமைச்சர் பழனிசாமி அவர்கள், தரகர்கள், புரோக்கர்கள் என்று வாய் கூசாமல் சொன்னார்.

 அவர்களை அழைத்துப் பேசவேண்டும் என்று நாம் தொடர்ந்து பிரதமருக்குக் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே அவர்களை அழைத்துப் பேசினால் சரியாகி விடும் என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். பா.ஜ.க. ஆளும் மாநிலத்தின் முதலமைச்சர்கள் கூட அந்த சட்டங்களை கடுமையாக எதிர்க்கிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி - தரகர்கள், புரோக்கர்கள் என்று போராடும் விவசாயிகளைச் சொல்லி இருக்கிறார். உங்களுக்குத் தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால் டெல்லிக்குச் சென்று அங்கு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைச் சந்தித்துப் பேச நீங்கள் தயாரா?

ஏற்கனவே அறிவித்த அறிவிப்பில் இருந்து உங்களுடைய உணர்வு, சுருதி மாறுவதற்கு என்ன காரணம்? தேர்தல் வருகிறது. அதனால் தான் பச்சைத் துண்டு பழனிசாமி இன்றைக்கு பச்சோந்தி பழனிசாமியாக மாறி மக்களை ஏமாற்றத் தொடங்கியிருக்கிறார். இன்னொன்றையும் அவர் பேசியிருக்கிறார். மத்திய அரசோடு இணக்கமாக இருந்து பல திட்டங்களை, காரியங்களை நாங்கள் இந்த ஆட்சியில் சாதித்து இருக்கிறோம் என்று ஒரு அபாண்டமான பொய்யை முதலமைச்சர் பழனிசாமி சொல்லியிருக்கிறார். நான் அதைப் பத்திரிகைகளில் படித்தேன்.

முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்களே, மத்திய அரசைப் பயன்படுத்தி எல்லாத் திட்டங்களையும் கொண்டு வந்துவிட்டோம் என்று சொல்கிறீர்களே, வர்தா புயல் வந்த போது தமிழக அரசின் சார்பில் கேட்கப்பட்ட நிதி 22,573 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசிடம் இருந்து வந்த நிதி 766 கோடி ரூபாய் தான்.ஒக்கி புயல் வந்தபோது மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிதி 9,302 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசிடம் இருந்து வந்த தொகை 133 கோடி ரூபாய்.கஜா புயல் வந்த நேரத்தில் மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதி 17,899 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசிடம் இருந்து வந்த நிதி 1,145 கோடி ரூபாய்.அதேபோல, நிவர் புயலுக்கு நிவாரணத் தொகை கிடைத்ததா? புரெவி புயல் நிவாரணம் வந்ததா? ஜி.எஸ்.டி. மூலம் பிடிக்கப்பட்ட தொகை இதுவரை வந்து சேர்ந்து இருக்கிறதா? 15-ஆவது நிதிக்குழுவில் உள்ள முரண் நீக்கப்பட்டதா? கொரோனா நிதி வந்ததா? எதுவும் வந்து சேரவில்லை.

பிறகு மானங்கெட்டு எதற்குக் கூட்டணி வைத்து இருக்கிறீர்கள் என்ற கேள்வியைத்தான் நான் இங்கே கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். மத்திய அரசு - மாநில அரசுகளுக்கு நிதி தராத போதெல்லாம் நான் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தொடர்ந்து குரல் கொடுத்திருக்கிறேன்.நான் மட்டுமல்ல, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமல்ல, நம்மோடு கூட இருக்கும் எல்லா உறுப்பினர்களும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார்கள்.ஆனால் இவர்கள் என்ன செய்தார்கள்? கையைக் கட்டி, வாயைப் பொத்திக்கொண்டு ஒரு அடிமையைப் போல இருந்தார்கள். தமிழ்நாட்டிற்கு எந்தப் புதிய திட்டமும் வந்து சேரவில்லை. என்ன சலுகையைப் பெற்றுத் தந்தார்கள்? ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. 

                                      *****************

என்னாச்சு எய்ம்ஸ் மருத்துவமனை?

மோடியும் பழனிசாமியும் எந்த அளவிற்கு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதில் ஒரு முக்கியமான உதாரணம், எய்ம்ஸ் மருத்துவமனை.அந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கப் போகிறோம் என்று நாடாளு மன்றத்தில் 2015ஆம் ஆண்டு மோடி அவர்கள் அறிவித்தார். அதற்கு பிறகு 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்த நேரத்தில் மோடி அவர்களை அவசர அவசரமாக மதுரைக்கு அழைத்து வந்து அடிக்கல் நாட்டு விழா நடத்தினார்கள்.இப்போது 2021. இதுவரையில் ஒரு செங்கல் கூட அங்கு வைக்கப்படவில்லை. எனவே தமிழ்நாட்டிற்கு மோடியும் பழனிசாமியும் எந்த நன்மையும் செய்ய மாட்டார்கள். அதற்கு உதாரணம் தான் இந்த மருத்துவமனை.

இந்தியாவில் மொத்தம் 15 மருத்துவ மனைகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசின் சார்பில் மோடி அறிவித்தார். அதில் 14 மருத்துவமனைகளின் பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் அந்தப் பணி தொடங்கப்படவில்லை.மற்ற மாநிலங்களுக்கு நிதியை மத்திய அரசே ஒதுக்கி, அந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை நிதி ஒதுக்கப்பட வில்லை. கேட்டால் ஜப்பானில் நிதி கேட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன், தமிழ்நாடு என்ன ஜப்பானிலா இருக்கிறது? குஜராத் மாநிலத்தில் தற்காலிகக் கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாடு என்பது இந்தியாவில் இல்லையா? குஜராத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஏன் முக்கியத்துவம் தரவில்லை. ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு நீங்கள் பூஜ்ஜியம் போட்டு கொடுத்து விட்டீர்கள்.

                                      *****************

தேசத் துரோக வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா?
இப்போது அதிமுக என்பது பாஜகவின் கிளைக் கழகமாக மாறிவிட்டது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கையைக் கட்டிக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு கேட்டு ஒரு அடிமையாக இருக்கிறார். இப்படி ஒரு அக்கிரமமான ஆட்சியை, அடிமைத்தனமான ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்தான் பழனிச்சாமி.இப்போது தேர்தல் வரும் காரணத்தால் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்திருக்கிறார். நான் கேட்கிறேன், கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போட்ட தேசத் துரோக வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா? இதுவரை வாபஸ் வாங்கவில்லை.

உதயகுமார், முகிலன், புஷ்பராஜ் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா? இல்லை. 2011 முதல் இந்த பகுதியையே ஒரு எமர்ஜென்சி பகுதியைப் போல உருவாக்கி வைத்திருக்கிறார்களே தவிர, வேறு ஒன்றும் அல்ல.
நான் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் பல மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தேன். அதேபோல இந்த மாவட்டத்துக்கு வந்தபோது இந்தப் பிரச்சினையைச் சொன்னார்கள். அதை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நான் அப்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த வுடன் அந்த தேசத்துரோக வழக்குகள் மற்றும் உதயகுமார், முகிலன், புஷ்பராஜ் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று சொன்னேன். இப்போதும் நான் உறுதியோடு அதனைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

                                      *****************

வேளாண்மைக்கு  தனி பட்ஜெட்

வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் உருவாக்கப் போகிறோம், மீண்டும் உழவர் சந்தை உருவாக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2500, கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும், அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண்துறையில் தனிப்பிரிவு, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வு மையம் உருவாக்கப்படும், மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இது ஏற்கனவே கடந்த பொங்கலுக்கு முதல் நாள் போகி அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசும் போது சொன்னேன். அதற்கு பிறகு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் அதையே சொல்லியிருக்கிறார். நான் கேட்கிறேன், 10 வருடங்களாக இந்த புத்தி வரவில்லையா?

                                      *****************

நாடே அதைப் பார்த்து சிரித்தது!

முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு, அவர் எவ்வாறு முதலமைச்சர் ஆனார் என்று சொன்னால் கோபம் வந்துவிடும். அவரைப் பற்றி நான் மட்டுமல்ல எல்லோரும் பேசியிருக்கிறார்கள். பேசியது மட்டுமல்ல, வலைதளங் களில் பார்த்திருக்கிறார்கள்,
தவழ்ந்து... ஊர்ந்து... சசிகலாவால் முதலமைச்சர் ஆனார் என்பதை நான் பல கூட்டங்களில் சொன்னேன். அதை நான் அவமானப்படுத்துவதற்காக சொன்னேன் என்று அவரும் நினைக்கவேண்டாம். நீங்களும் நினைக்க வேண்டாம். நடந்த செய்தியைச் சொன்னேன்.

ஆனால் அவருக்கு கோபம் வந்து விட்டது. அதற்கு அவர் நான் சசிகலாவால் முதலமைச் சராகவில்லை. எம்.எல்.ஏ.க்களால் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று சொல்லி உள்ளார்.அதற்கு நான் விளக்கமாகவும் சொன் னேன். நீங்கள் சசிகலாவின் தயவில்தான் முதலமைச்சர் பதவியை வாங்கினீர்கள் என்று சொன்னேன். நீங்கள் இல்லை என்று மறுக்கிறீர்கள். ஊர்ந்து போனது உண்மையா? இல்லையா? முதலில் அதை சொல்லுங்கள். நீங்கள் தவழ்ந்து போனது உண்மையா? இல்லையா? அதை சொல்லுங்கள்.நான் மட்டுமா பார்த்தேன். இந்த நாடே அதைப் பார்த்து சிரித்தது. அதை நான் தவறாக சொல்லியிருந்தால் பழனிசாமி அவர்களே என் மீது வழக்குப் போடுங்கள். என் மீது மட்டுமல்ல, அதைப் பார்த்த அனைவர் மீதும் நீங்கள் வழக்கு போடுங்கள். உங்களுக்கு முதலில் அதற்கு தைரியம் இருக்கிறதா? என்று கேட்டேன்.இப்போது திடீரென்று அவர், நான் என்ன பாம்பா? பல்லியா? ஊர்ந்து போவதற்கு என்று சொல்லியிருக்கிறார். 

பாம்பு, பல்லிகளின் விஷத்தை விட துரோகம் தான் பெரிய விஷம். அந்த துரோகத்தை செய்தவர் தான் பழனிசாமி. யாரால் பதவி கிடைத்ததோ அந்த சசிகலாவிற்கு துரோகம் செய்தவர். அம்மையார் ஜெயலலிதா அவர் களுக்கு துரோகம் செய்தவர். இப்போது அ.தி.மு.க.விற்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறார்.

;