election2021

img

காலியாகும் தமாகா கூடாரம்...

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோவை தங்கம் சில தினங்களுக்கு முன்பு, அக்கட்சியிலிருந்து விலகியதுடன் வால்பாறை தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கியது தமாகா தலைவர் வாசனுக்கு  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் கோவை தங்கம் சுயேச்சையாக போட்டியிடுவதால் அந்த தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு வெற்றி மிக எளிதாகிவிட்டது.இந்த அதிர்ச்சியிலிருந்து ஜி.கே. வாசன் மீள்வதற்குள் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ரயில்வே தொழிற்சங்க தலைவருமான ஞானசேகரன் கட்சியிலிருந்து விலகி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் தமாகா கூடாரம் காலியாகி வருவது வாசனுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

;