election2021

img

விருதுநகரில் யோகி ஆதித்யநாத்துக்கு காத்திருந்த காலி நாற்காலிகள்...

விருதுநகர்
விருதுநகர் நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காலி நாற்காலிகளைப் பார்த்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக சார்பில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் பாண்டுரங்கன், அமமுக சார்பில் கோகுலம் எம்.தங்கராஜ், நாம் தமிழர் கட்சி மற்றும் சமக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.பாஜக-விற்கு தொகுதி ஒதுக்கப்பட்ட காரணத்தால், அதிமுக தொண்டர்கள் ஆர்வமாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. பலர் மறைமுகமாக அமமுக-விற்கு சென்று தேர்தல் பணியாற்றுகின்றனர். மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் வெளியூர் நபர்களை பாஜகவினர் ஈடுபடுத்தி வருகின்றனர். அவர்கள் மோடியை புகழ்ந்து பேசுவதால், பொதுமக்கள் பலர் நேரடியாக அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, பதிவு செய்யப்பட்ட பாடல், வசனங்கள் மூலம் ஒருபக்கம் பிரச்சாரம் செய்து வருகின்ற னர். மேலும், சினிமா நடிகை நமீதா மதுக்கடை அருகே பிரச்சாரம் செய்த போதும், போதையில் வந்த நபர் ஒருவர் எதிர்க் கேள்வி கேட்டதால், தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்நிலையில், பாஜகவிற்கு ஆதரவாக நடிகைகாயத்ரி ரகுராம் பிரச்சாரம்செய்துள்ளார்.

நிலைமை இவ்வாறு இருக்க, உத்தரப்பிரதேச முதல்வரும் தீவிர இந்துத்துவா பேர்வழியுமான யோகிஆதித்யநாத் விருதுநகருக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. புதன் கிழமைமாலை பலத்த பாதுகாப்புடன் நகராட்சி மைதானத்திற்கு அவரை அழைத்து வந்தனர்.  பின்பு, அவர் இந்தியில் பேசத் துவங்கினார். அப்போது, மைதானத்தில் 60 சதவீத நாற்காலிகள் காலியாக கிடந்தன. சில நிமிடங்கள் ஆனதும், வெயிலின் தாக்கம்தாங்க முடியாமல் மேலும் பலர் மைதானத்தை விட்டு வெளியேறினர். அவர் இந்தியில்பேசியதை ஒருவர் தமிழில் தடுமாற்றத்துடன் மொழியாக்கம் செய்தார். அப்போது, மேலும் கணிசமானோர் மைதானத்தை விட்டு வெளியேறினர். பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட பலர், இதற்கு மேல் இங்கு இருக்க முடியாது என வீட்டிற்கு நடையைக்கட்டினர். இதனால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தபாஜகவினர் செய்வதறியாது திகைத்தனர்.

அப்போது பேசிய யோகி ஆதித்ய நாத், திமுக-விற்கு வாக்களித்தால் பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாதுஎன ஏற்கனவே பிரதமர் மோடி தாராபுரத்தில் கூறிய வார்த்தைகளையே ரிப்பீட் செய்தார். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஹத்ராஸ் சம்பவம் குறித்தோ, இந்தியாவிலேயே அதிகபட்சமாக பெண்கள் மீதான வன்கொடுமைகள் அங்கும், பாஜக ஆளும்மாநிலங்களிலும் நடைபெற்று வருவது குறித்தும் ஏதும் பேசவில்லை.மேலும், மத்திய அரசு விவசாயி களில் சிலருக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் (மாதம் ரூ.500) வழங்கி வருவதை பெருமையாக கூறிக் கொண்டார். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த3 வேளாண் சட்டங்கள் குறித்தும் அதைஎதிர்த்து தலைநகரில் விவசாயிகள் வீறு கொண்டு போராடி வருவதைப் பற்றியும் வாயைத் திறக்கவில்லை.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, திடீரென அறிவித்த ஊரடங்கால் வேலை இழப்பு, ஏராளமான சிறு தொழில்கள் முடங்கி மீள முடியாத நிலைமையில் இந்தியப் பொருளாதாரம் உள்ள நிலையில், இறுதிக் கருத்தாக பேசிய யோகி,  பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாகவும் பச்சைப் பொய்யைக் கூறிவிட்டு இராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார்.

;