election2021

img

தீக்கதிர் தேர்தல் துளிகள்....

தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட மொத்தம் 7,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு தகுதியில்லாத 2656 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4363 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 236 வேட்புமனுக்கள் பரிசீலினையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                             *************

வாஷிங் மெசின் வழங்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து வித்தியாசமான விளக்கத்தை அளித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கவே இலவச வாஷிங்மெசின் வழங்குவதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதாம்.

                             *************

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்குகளை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பப்பெற இருப்பதாக அறிவித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதனை வரவேற்கிறோம் என்று பதிவிட்டிருக்கிறார் அணுஉலைக்கு எதிரான  செயற்பாட்டாளர் சுப.உதயகுமார்.

;