election2021

img

எடப்பாடி அரசும் 20% கொள்முதலும்...

மூன்று வேளாண் விரோதச் சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளை முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் தயவில் தள்ளியுள்ளது மத்திய பாஜக அரசு. ஏற்கனவே அரசு நிர்ணயிக்கும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகள் சாகுபடிக்காகச் செலவிடும் தொகையை ஈடுகட்டவே போதவில்லை.தமிழகத்தில் 20 சதவிகித நெல்லே அரசு கொள்முதல் நிலையங்களால் கொள்முதல் செய்யப்படும் நிலையில், தனியார்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் குவிண்டாலுக்கு 500, 600 ரூபாய் குறைவாகவே கொள்முதல் செய்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் அரசு கொள்முதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் சந்தைக்குள் தள்ளிவிட்டுள்ளது மத்திய பாஜக அரசு. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுங்கள் எனக் கோரிக்கை வைத்து, நான்கு மாதங்களுக்கும் மேலாக தில்லியில் முற்றுகை போராட்டம் நடத்தி வரும் எளிய விவசாயிகளை, தீவிரவாதிகள், போராட்டத்தைப் பிழைப்பாக வைத்திருப்பவர்கள் என்றெல்லாம் சொல்லி, பிரமதர் மோடி கொச்சைப்படுத்துகிறார். பாஜக என்ன செய்தாலும், ஜால்ரா அடிக்கும் அதிமுக முதல்வர் எடப்பாடியோ, ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசியாக, வேளாண் சட்டங்கள் நல்லது என வாய்க்கூசாமல் பொய் பேசுகிறார்.

;