election2021

img

கொள்ளிக் கட்டையை எடுத்து முதுகு சொரியவா?

கோவையை ராணுவத் தளவாடங் கள் உற்பத்தி செய்யுமிடமாக மாற்றுவேன் என்று வானதியம்மா அடிச்சு விட்டுட்டு இருக்கு..மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் சீரழிவுக்கு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது என்று கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதோ டல்லாமல் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு குடிமகனும் பல்வேறு வழியில் தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தவறான பொருளாதாரக் கொள்கைகள், செல்லாப் பணம், ஜி.எஸ்.டி, பிரச்சனைகளை ஒவ்வொரு தனி மனிதனும் தலையில் தூக்கிச் சுமக்கிறான்.சிறு தொழில்களை நடத்தி வந்த சிறு முதலாளிகள் தங்கள்நிறுவனங்களை இழுத்து மூடி விட்டுகூலிப்பணிகளுக்குத் திரும்பி விட்டார்கள்.கோவையில் இன்ஜினி யரிங் வகைமையில் சிறு தொழில்கள் நசிந்து விட்டன. பெரிய அளவில் முதலீடு செய்தவர்கள் மட்டுமே தற்போதைக்குக் கொஞ்சம் தாக்குப் பிடித்திருக் கிறார்கள்.
கோவையில் இப்படி என்றால், திருப்பூரில் அதை விட மோசமாக பின்னலாடைத் தொழில் கடும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. வெளிநாடுகளில் கொரோனா காரணமாக வாங்கும் சூழல் குறைந்திருக் கிறது.இங்கிருந்து ஏற்றுமதி குறைந்திருப்பதால் கடுமையான வேலைப் பற்றாக்குறை.ஒவ்வொரு நிறுவனமும் குறைந்த ஆட்களையே வேலைக்கு வைத்து உற்பத்தியைப் பார்த்துக் கொள்கின்றனர்.

இடையில் பின்னலாடைக்கான நூல் விலையேற்றம் கடுமையாகத் தாக்கும்.கடந்த திங்களன்று இந்த விலையேற்றத்தைக் கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் செழித்திருந்த பழையதொழில்களையெல்லாம் நாசம் செய்தது பி ஜே பி அரசின் கூர்மை யற்ற பார்வை.. செயல்பாடு.இருக்கிற அரசின் பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தா யிற்று.வங்கிகள்,காப்பீட்டுத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு களையும் கணிசமாக நாசம் செய்தாயிற்று.

இந்நிலையில் சுற்றியுள்ள 11 தொகுதிகளில் போட்டியிடுபவர்களில் நான் ஒருத்தியே பெண் வேட்பாளர்..எனவே ஒரு பெண்ணாகிய என்னை ஆதரித்து ஓட்டுப் போடுங்கள் (கோவையைச் சுடுகாடாக்க?) என்று பேசி வருகிறார் வானதி.ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் எங்களுக்குச் சிக்கலில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களைக் கொண்டு வருவதில் எங்களு க்குக் கடும் சிக்கல்  இருக்கிறது.இதுவரையில், உங்கள் பிரச்சாரத்தில் உங்கள் மோடியைப் பற்றிப்பேசவே பயப்படுகிறீர்கள். அவரது புகைப்படங்களைக் கூட நீங்களோ, உங்கள் கூட்டணிக் கட்சிகளோ பயன்படுத்துவதே இல்லை...கோவையில் அதிமுக சுவர் விளம்பரங்களில் பெருவாரியான இடத்தில் தாமரையைக் காணோம்... உங்கள் கட்சி மிரட்டலுக்கு பயந்து தான் அதிமுக உங்களோடு கூட்டணி வைத்துள்ளது. இது கீழ் மட்டத் தொண்டர்கள் வரைகடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள தால் தான் பல மாவட்டங்களில் வெளிப்படையாக, பிஜேபி கூட்டணியை எதிர்த்து அதிமுகவின் விசுவாசிகள் ரோட்டில் இறங்கி எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள்.

உங்கள் பிரச்சாரத்துக்குக் கூடவரும் ஆட்களிடம் அவரவர் கட்சிக்கொடியைப் பிடுங்கி விட்டுக் கட்டாயமாக பிஜேபிக் கொடியைக் கையில் திணிக்கிறீர்களாமே?90களில் ஏற்பட்ட அசம்பாவிதங் களுக்குத் தங்கள் கட்சியே முழுப் பொறுப்பு வானதி.கோவை நகரம்  பல வருடப் போராட்ட வாழ்க்கைக்குப் பின் மெது மெதுவே மீண்டு வருகிறது.இந்நிலையில், தங்களைப் போன்ற மதவாதக் கூடாரத்தில் இருந்து வரும் ஒருவர் கோவைக்குக் கண்டிப்பாகத் தேவையில்லை.உங்களைத் தேர்ந்தெடுப்பது என்பது எங்களுக்குக் கொள்ளிக் கட்டையை எடுத்து முதுகு சொரிந்து கொள்வது போன்றதே.

கோவைக்கு நீங்கள் செய்யப் போவதாகச் சொல்லும் புளுகு மூட்டைகள் எல்லாம் தேவையில்லாத ஆணிகளே!இந்து,இந்து மதம்,இந்துத்துவா என்று பேசிக் கொண்டிருந்த நீங்கள் இப்போது ஏன் கிறித்துவ / இஸ்லாமிய மத போதகர்களிடம் எல்லாம் போய் தலை குனிந்து ஆசிர்வாதம் வேண்டி நிற்கிறீர்கள்? வோட்டுக்காக எல்லா மதத்தையும் ஆட்டையில் சேர்த்துக் கொள்ளலாமா?வேண்டாம்..மனசாட்சியை அடகு வைத்து விட்டு அரசியல் செய்ய வேண்டாம்.எங்களுக்குக் கூச்சமாக இருக்கிறது மேடம்!

நறுமுகைதேவி

;