election2021

img

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி இளைஞர்....

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்தொகுதியைச் சேர்ந்த தேவூர் பகுதியில் தேர்தல் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தோம். அப்போது தேவூர் மெயின் ரோட்டில் பிரச்சார வாகனத்தில் கணீரென்ற குரல் அனைவரையும் கவர்ந்தது. பிரச்சார வாகனத்தின் முன்பகுதியில் இளைஞர் ஒருவர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். நாமும்அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தோம்.

சற்றுநேரத்தில் உணவு இடைவேளைக் காக, வாகனத்தின் ஓட்டுநர் அவரை தூக்கி கீழஅமர வைத்தார். இதை பார்த்த நமக்கு கொஞ்சம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இதனைத்தொடர்ந்து நாம் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் கீழ்வேளூர் தொகுதியில் காகழனி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் அச்சுதமேனன் என்பதும் இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் கூறினார்.

“தற்போது அதிமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மத்தியில்நடையா நடந்து ஒரு வேலையும் ஆகவில்லை. எனவே திமுக ஆட்சி வந்தால் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வு சிறக்கும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். இதுகுறித்து என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளிடம் கூறி திமுக கூட்டணிக்கு ஆதரவை திரட்டி வருகிறேன்.இந்நிலையில் நானே முன்வந்து தற்போது பிரச்சார வாகனத்தை ஒதுக்கித் தரக் கூறிநாகைமாலிக்காக பிரச்சாரம் செய்து வருகிறேன். இதனை அறிந்த எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியினர் ஒரு நாளைக்கு உணவுமற்றும் ரூ.1500 முதல் ரூ.2000 தருகிறோம். உங்களுக்கு தனி வாகனம் ஏற்படுத்தித் தருகிறோம். எங்களுக்கு பிரச்சாரம் செய்யுங்கள்என்று கேட்டனர்.  ஆனால் நான் மறுத்துவிட்டேன். இங்கு சாப்பாடுக்கே வழி இல்லை என்றாலும் கொள்கை ரீதியாக மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைக்காக போராடுவார்கள் என்ற எண்ணத்தால் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறேன். 

தற்போது கீழ்வேளூர் தொகுதியில் தினந்தோறும் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் சென்று அரிவாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து வருகிறேன். தொகுதியில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது” எனக் கூறினார். மாற்றுத்திறனாளியாக இருந்தும் அவர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதிலிருந்தே வெற்றி உறுதியாகி உள்ளதை பார்க்க முடிகிறது.

;