election2021

img

திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு வைப்புத்தொகை வழங்கிய பொது காப்பீட்டு ஊழியர்கள்....

திண்டுக்கல்:
திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பா ளர் என்.பாண்டி வேட்புமனுக்கான வைப்புத்தொகை ரூ.10 ஆயிரத்தை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் முதல் தவணையாக வழங்கினர். 

பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் செவ்வாயன்று காலை வேட்பாளர் என்.பாண்டியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததோடு வைப்புத்தொகை ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையையும் வழங்கினர். பொது இன்சூரன்ஸ்ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பி.எஸ். பெரியசாமி, மாவட்டச்செயலாளர் ஆர்.கௌதமன், பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க துணைத்தலைவர் ஆர்.ராஜேந்திரன், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ராணி  ஆகியோர் உடனிருந்தனர். (நநி)

;