election2021

img

தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற சிபிஎம் வேட்பாளர்கள்....

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யாவை, சிபிஎம் வேட்பாளர்கள் நாகை மாலி (கீழ்வேளுர்), எஸ்.கே.பொன்னுத்தாய் (திருபரங்குன்றம்), கே.சீனிவாசன் (கோவில்பட்டி), எம்.சின்னத்துரை (கந்தர்வக்கோட்டை), ஏ.குமார் (அரூர்), என்.பாண்டி (திண்டுக்கல்) ஆகியோர் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். உடன் மாநிலக்குழு உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் எம்பி, வி.மாரிமுத்து ஆகியோர் உள்ளனர்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் ஞாயிறன்று (மார்ச் 14) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க, கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்ற சிபிஎம்  வேட்பாளர்கள் நாகை மாலி (கீழ்வேளுர்), எஸ்.கே.பொன்னுத்தாய் (திருபரங்குன்றம்), கே.சீனிவாசன் (கோவில்பட்டி), எம்.சின்னத்துரை (கந்தர்வக்கோட்டை), ஏ.குமார் (அரூர்), என்.பாண்டி (திண்டுக்கல்) ஆகியோர் வாழ்த்துப் பெற்றனர்.     

இதனைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இச்சந்திப்புகளின் போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் எம்.பி., வி.மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
 

;