election2021

img

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் ஒப்பந்தமானது....

சென்னை:
மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் குறித்து திமுகவுடன் நடத்தியபேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இரு கட்சி தலைவர்களான மு.க.ஸ்டாலின், கே.எஸ். அழகிரி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டனர். தொகுதி விவரம் வருமாறு:பொன்னேரி(தனி), வேளச்சேரி, தென்காசி, ஸ்ரீபெரும்புதூர்(தனி), சோளிங்கர், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி,  ஓமலூர், ஊத்தங்கரை (தனி), அறந்தாங்கி, சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், ஈரோடு கிழக்கு, நாங்குநேரி, திருவாடானை, ஸ்ரீவில்லிபுத்தூர், கோவை தெற்கு, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, மேலூர், காரைக்குடி, விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல்.இந்த தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என்றும் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியின் மகத்தான வெற்றி இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாக அமையும் என்று செய்தியாளர்களிடம் கே.எஸ். அழகிரி தெரி வித்தார்.

;