election2021

img

சிபிஎம் வேட்பாளர் நாகைமாலிக்கு வாக்குச் சேகரித்து சுட்டெரிக்கும் வெயிலில் பிரச்சாரம் செய்த திரைக் கலைஞர்கள்...

கீழ்வேளூர்:
திரைபிரபலங்கள் பெரும்பாலும் சொகுசான வாழ்க்கையை வாழக் கூடியவர்கள் என்ற மனநிலைதான் மக்களிடம் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட பல திரைக்கலைஞர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வீதிகளில் இறங்கி போராடுவதோடு, முற்போக்கான அமைப்புகளில் தங்களை இணைத்துக் கொண்டு சமூக பிரச்சனைகளை கையிலெடுத்து போராடியும் வருகின்றனர்.

அந்த வரிசையில் திரைக்கலைஞர் ரோகிணி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருவதோடு பல்வேறு மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார். அவரைப் போன்றே இயக்குநர் லெனின்பாரதி, தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா போன்றவர்களும் ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் நலனுக்காக வீதியில் இறங்கி போராடி முன்மாதிரியாக விளங்குகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகைமாலிக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குக் கேட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாநில துணை தலைவரும், திரைக் கலைஞருமான  ரோகிணி, இயக்குநர் லெனின் பாரதி ஆகியோர் சனிக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, சோழவித்தியாபுரம், செம்பியன்மகாதேவி, புதுச்சேரி, கீழ்வேளூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சொகுசான வாழ்க்கையையும், தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தால் பல லட்சம்ரூபாய்களை கட்டணமாக வாங்கும் பிரபலங்களுக்கு மத்தியில் உழைப்பாளி மக்களின் நலனுக்காக அன்றாடம் போராட்டக் களத்தில் நிற்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு தங்கள் சொந்த செலவில் ஆடம்பரமின்றி சாமானியர் போன்றே பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை அனைத்து தரப்பினரும் ஆச்சரியமாய் பார்த்தனர்.கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகள் வியப்புக்குரியது என்பதற்கு திரைக்கலைஞர் ரோகிணி போன்றவர்களே சாட்சி.

;