election2021

img

ஏப்.1ல் மத்தியத் தொழிற்சங்கங்கள் புதிய தொழிலாளர் சட்டங்கள் எரிப்புப் போர்.... அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆதரவு...

புதுதில்லி:
மத்தியத் தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 1 அன்றுபுதிய தொழிலாளர் சட்டங்களை எரிக்கும் போராட்டத்தை நடத்துகின்றன. இதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்தியத் தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 1 அன்று நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களையும் எரிக்கும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன. இதற்கு நம்முடைய கிளைகளும், செயற்பாட்டாளர்களும் முழுமையாக ஆதரவு அளித்திட வேண்டும் என்று அகிலஇந்திய விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இந்தத் தொழிலாளர் சட்டங்களை மறுஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்கிற தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை மத்திய மோடி அரசாங்கம் அரக்கத்தனமான முறையில் ஏற்க மறுத்து வருகிறது.புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராகவும், தனியார்மயத்திற்கு எதிராகவும்தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கிணங்கவும் நடைபெறும் இப்போராட்டத்தில் மக்கள் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் மூன்று கருப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் எல்லைகளில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டத்திற்கு, தொழிலாளர் வர்க்கமும், தொழிற்சங்கங்களும் தீர்மானகரமான முறை
யில் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து அளித்து வருகின்றன.

அடிப்படை உரிமைகளை  மறுக்கும் சட்டங்கள்
அதேபோன்று, தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் விதத்திலும், அரசமைப்புச் சட்டத்தில் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை மறுக்கும் விதத்திலும் தங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராகவும், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை என்பதை மறுக்கிறது, சங்கம் அமைக்கும்உரிமையை மறுக்கிறது, கூட்டு பேர சக்திக்கான தொழிற்சங்கங்கள் அமைக்கும் உரிமையை மறுக்கிறது, வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை மறுக்கிறது, தொழிலாளர் வர்க்கம்கடந்த காலங்களில் கடுமையான போராட்டங்களின் விளைவாக பெற்றுள்ள உரிமைகள் பலவற்றை மறுக்கிறது. இப்புதிய தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மோடி அரசாங்கத்தால் கார்ப்பரேட்டுகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து கொண்டுவரப்பட்டவையாகும். எனவே இவை மக்களுக்கு, குறிப்பாகதொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானவைகளாகும்.

மோடி அரசாங்கம் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில், பொருளாதார மந்தத்தைக் கட்டுப்படுத்துவதில், வேலையின்மையைப் போக்குவதில் பரிதாபகரமான முறையில் படுதோல்வி அடைந்திருக்கிறது. மேலும் இது, இருந்துவரும் சமூகப் பாதுகாப்பு உரிமைகளையும் நீர்த்துப்போக வைத்திருக்கிறது. புதிதாக குறிப்பிட்ட கால அளவிற்கு நிரந்தரஊதியம் என்று கொண்டுவந்து, தொழிலாளர்கள் பெறும் ஊதியங்களைக் கடுமையாக வெட்டிக் குறைத்திருக்கிறது.

பாடம் புகட்டும் தருணம்
நாட்டின் சுயச் சார்பு, இறையாண்மை மற்றும்மக்களின் பேச்சுரிமை அனைத்தும் கேள்விக்குறியாகி ருக்கின்றன. நாட்டின்சொத்துக்கள்சூறையாட அனுமதிக்கப்பட்டிருக்கிறது.தொழிலாளர் விரோத, விவசாயி விரோத,மக்கள் விரோத, தேச விரோதக் கொள்கைகளைக் கடைப்பிடித்துவரும் மத்திய அரசுக்குப்பாடம் புகட்ட சரியான தருணம் வந்திருக்கிறது.ஏப்ரல் 1 அன்று நடைபெறும் 4 தொழிலாளர் சட்ட எரிப்புப் போர் வெற்றிபெறுவதன் மூலம்தொழிலாளர்-விவசாயி ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். பாஜக தலைமையிலான மோடி அரசாங்கத்தின் கீழ் ஏகபோக மூலதனம், கார்ப்பரேட்டுகள் ஆட்சிக்கு எதிரானமக்களின் போராட்டங்கள் மேலும் வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்ல அது உதவிட வேண்டும்.இவ்வாறு அசோக் தாவ்லே, ஹன்னன் முல்லாஅறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். (ந.நி.)

;