election2021

img

அனுபவப் பள்ளியாக திகழ்ந்த பிரச்சாரக் களம்...

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல் 6) நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் களத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முதன்மை இடத்தில் நிற்கிறது. இக்கூட்டணியில் அனைத்து வேட்பாளர்களும் உளப்பூர்வமாக மக்களைச் சந்தித்தார்கள். பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. அதேவேளை நவீனமான டிஜிட்டல் வடிவத்தையும் அதனுடன் இணைத்து நேரடியாக வீடு வீடாக மக்களை சந்திக்கும் பாரம்பரிய வடிவத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொண்ட பிரச்சாரமாக, திருப்பரங்குன்றம் தொகுதியில் இளைஞர்கள் நடத்திய பிரச்சாரம் அமைந்திருந்தது. இதில் அவர்களுக்கு ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன. தமிழகத்தின் கிராமங்கள் எத்தனை அழகும்,எத்தனை வேதனையும் உள்ளடக்கியவை யாக இருக்கின்றன என்பதை நாங்கள் நேரடியாகப் பார்த்தோம் என்று கூறுகிறார்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.

இத்தொகுதியில் போட்டி யிடும் சிபிஎம் வேட்பாளர் பொன்னுத்தாயை ஆதரித்து, அவரை அறிமுகம் செய்யும்விதத்திலும், தொகுதிக்கு அவர் அளித்துள்ள வாக்குறுதிகளை தொகுத்தும், டிஜிட்டல் வடிவத்தில் பிரச்சாரம் செய்யும் வாகனத்துடன் 112 மையங்களில் சுமார் 35 ஆயிரம் வீடுகளில் நேரடியாக துண்டுப்பிரசுரம் வழங்கியுள்ளனர். 70 இளைஞர்கள்மற்றும் மாணவர்கள் பங்கேற்ற னர். 

இப்பிரச்சாரம், எளிய மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற உறுதியை அளித்திருப்பதாகக் கூறுகின்றனர், வாலிபர் சங்க தலைவர்களான எஸ்.கார்த்திக், தமிழரசன், பால கிருஷ்ணன் உள்ளிட்டோரும் இந்திய மாணவர் சங்கத்தின் பிருந்தா, ராகுல் உள்ளிட்டோரும்.

;