election2021

img

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்....

சென்னை:
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்வெள்ளியன்று தொடங்கிய நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்தவண்ணம் உள்ளன.அவ்வகையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி பட்டியல் வியாழனன்று அறிவிக்கப்பட்டது. வானூர்(தனி), காட்டுமன்னார் கோவில் (தனி), செய்யூர்(தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான உடன்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டா லின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

;