election2021

img

பாஜக வேட்பாளருக்கு பேசத் தெரியாது... கலாய்த்த அமைச்சர்....

விருதுநகரில் தனியார் திருமண மண்டபத்தில்  பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை அறிமுகம் செய்தும், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அதில் வேட்பாளர் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். அவரை தொடர்ந்து  சிறப்புரையாற்றிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வேட்பாளருக்கு சரியாக பேசத் தெரியாது என ஏற்கனவே என்னிடம் கூறி விட்டனர் என தெரிவித்தார். இதனால், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட அமைச்சர், பேசுவதா முக்கியம், செயல்படுவது தான் முக்கியம், எனக் கூறி சமாளித்தார்.

அதிமுக, பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்திருப்பதால் இது ஆன்மீக கூட்டணி எனக் கூறிய அமைச்சர், ஆக்கப்பூர்வமான கூட்டணி எனவும் தெரிவித்துக் கொண்டார். பின்பு, கட்சியில் புதிதாக வந்தவர்கள் சீட் கிடைக்கவில்லை என்றதும், 5 மணி நேரத்தில் வேறு கட்சிக்குப் போய் சீட் வாங்கி விடுகின்றனர்; எப்படி இருக்கிறான் பாருங்கள், கட்சிக்காரர்கள் என வருத்தமும் பட்டுக் கொண்டார்.  அப்போது மேடையில் இருந்த பாஜகவினர், திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணனுக்கு சீட் கொடுத்ததை நினைத்து கை தட்டாமல் தவிர்த்தனர்.

;