election2021

img

சிறையிலிருந்தே எம்எல்ஏவாக வெற்றிபெற்ற பி.ராமமூர்த்தி.....

தமிழ் இந்துவில், பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்த பொழுது அதன் தமிழகத் தலைவரான பி.ராமமூர்த்தி (பிளவுக்கு பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்தார்) அரசியல் சதி வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு சிறையிலிருந்தே நாட்டின் முதல் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த தேர்தலில் சிறையிலிருந்தே வெற்றி பெற்றார். அவருக்காக என்.சங்கராய்யா, கே.டி.கே.தங்கமணி, ஐ.மாயாண்டிபாரதி, கே.பி.ஜானகியம்மாள் களத்தில் பணியாற்றி சிறையிலிருந்து பி.ஆர் வெற்றி பெற்றார். பின் 1967-ல் நாடாளுமன்ற மக்களவை மதுரை தொகுதியிலும் பி.ராமமூர்த்தி வெற்றி பெற்றார். 1967 சட்டமன்றத் தேர்தலில் மதுரையிலிருந்து என்.சங்ரய்யாவும், கே.பி.ஜானகியம்மாளும் வெற்றி பெற்றனர். ஆனால் மேலும் ஒரு செய்தியை தமிழ் இந்து சொல்லியிருக்கவேண்டும்.

மேலும் என்னவென்றால், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பி. ராமமூர்த்தி   சட்டமன்ற நடக்கும் நாளில் அன்று காலையில் அதிகமாக யாரின் கவனத்திற்கும் வராமல் தன்னுடைய திருமணத்தை பதிவு திருமணமாக எளிமையாக நடத்தினார். திருமணத்ததை முடித்துவிட்டு காலை 11 மணிக்கு வாக்கில் சட்டமன்றம் சென்றபோது அமைச்சர் சி.சுப்ரமணியம் நம்மிடையே புது மாப்பிள்ளை இருக்கிறார் என்று பி.ராமமூர்த்தியை பார்த்து சொன்னவுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துக்கள்சொன்னது கடந்த கால வரலாறு. எங்களையெல்லாம் அழைத்தால் செலவு அதிகமாகிவிடுமா என்று சொல்லிவிட்டு வாழ்க மணமக்கள் என்று சி.எஸ் வாழ்த்தினார். அன்று மாலை நண்பர்களுடைய வேண்டுகோளால் சிந்தாதிரிப்பேட்டையில் பி.ராமமூர்த்தி தம்பதியருக்கு வரவேற்பு வெறும் சிற்றுண்டி, தேநீரோடு மணமக்களுக்கு வாழ்த்தரங்கம் நடந்தது. இப்படியும் அரசியல் தலைவர்கள் நம்மிடம் இருந்தார்கள்.

ராஜாஜிக்கும் கம்யூனிஸ்ட்டுகளும் அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்கள் இருந்தன, எதிர்வினைகள் இருந்தன. ராஜாஜி பி.ராமமூர்த்தியை அழைத்து ஆசீர்வாதங்கள்என்றுசொன்னதெல்லாம் உண்டு. இன்றைக்கு இப்படி நினைத்துப் பார்க்கமுடியுமா?.
தகுதியே தடை என்று ஆகிவிட்டது, பின் அன்பு, பாசம், நன்றி என அரசியலில் அந்த காலத்தைப் போல இன்றைக்கு எப்படி எதிர்பார்க்கமுடியும். அந்த நாட்களுடைய நிகழ்வுகளை அசைபோட முடியுமே தவிர, என்ன செய்யமுடியும்..?

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.இராதாகிருஷ்ணன் முகநூல் பதிவிலிருந்து.... 

;