election2021

img

எய்ம்ஸ் மருத்துவமனை... இராஜன் செல்லப்பாவின் பொய்க்கு நட்டா பதிலடி....

திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இராஜன் செல்லப்பா ரீல்விடுவதில் மன்னர். தோல்வி பயத்தில் உழன்றுவரும் அவர், தாம் வெற்றிபெற்றால் எய்ம்ஸ் வந்துவிடும் என தொகுதியில் பொய் பேசிவந்தார். எப்படியாவது வெற்றி பெற்று மந்திரியாவது தான் அவரது ‘எய்ம்’ ஆனால்,  எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு யார் காரணம் என்பதைஅம்பலப்படுத்தி விட்டார் பாஜக தலைவர்ஜே.பி.நட்டா . எய்ம்ஸ் குறித்து சென்னையில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு: நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது. தாமதத்திற்கு நான் முழுமையாக பொறுப்பேற்கிறேன். ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகளுடன் எய்ம்ஸ் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமானம், கட்டட வடிவமைப்பு, மண் பரிசோதனை மற்றும் நிலம் தொடர்பான சிக்கல்களால் தாமதமானது, ஆனால் அது விரைவில் வரும். இதில் ஜே.பி.நட்டா கூறுவதில், கட்டட வடிவமைப்பு மட்டும் மத்திய அரசைச் சார்ந்தது. மண்வள பரிசோதனை, நிலம் தொடர்பானசிக்கல்களை தீர்க்கவேண்டியது மாநில அரசு தான்.மறைமுகமாக மாநில அரசின்மீது பழி சுமத்தியுள்ளார் நட்டா.

;