election2021

img

அரசியல் புயலில் அதிமுக தூக்கி எறியப்படும்.... கீழ்வேளூர் பிரச்சாரத்தில் கி.வீரமணி பேச்சு....

கீழ்வேளூர்:
சனிக்கிழமை மாலை கீழ்வேளூர் நகரம் கீழவீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகைமாலிக்குவாக்கு கேட்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பூபேஷ்குப்தா வரவேற்றார்.

இதில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசுகையில், “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பொதுமக்கள் தயாராகி விட்டனர். ஆகையால் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக பங்கு பெறுவதை பார்க்க முடிகிறது. நல்லாட்சி தொடர வேட்பாளர்களை நோக்கி வாக்காளர்கள் வருகிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி லட்சிய கூட்டணி. இது தேர்தலுக்காக உருவானது இல்லை. அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக ஆட்டி
வைக்கும் கூட்டணி. இது நீட், காவிரி, சமூகநீதி, குலக்கல்வி, இந்தித்திணிப்பு, மாநில உரிமை பறிப்பு உள்ளிட்டவைகளில் மக்களை பற்றி சிந்திக்காத பதவி வெறி, சாதி வெறி, மதவெறியை இணைத்து வந்துள்ள கூட்டணி.

‘இடதுசாரிகள் வேறு; திராவிடம் வேறு அல்ல. யாதும் ஊரே யாவரும் கேளிர்; அனைவரும் சமம்’ என நிலைநாட்டுவதில் கவனமாக இருப்பவர்கள். கொரோனா கொடிய நோயை விட ஆபத்தானது ஆர்எஸ்எஸ் இயக்கம். அது தற்போது அதிமுகவழியே உள்ளே வரப் பார்க்கிறது.  இதற்கு ஒரே தடுப்பூசி ஸ்டாலின்தான். நிரந்தரமாக தடுக்க முகக் கவசமாகநாகைமாலி உள்ளார் என கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆர்எஸ்எஸ் பற்றி அவர் பேசியது அனைவர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து கைதட்டலைப் பெற்றது.ஏப்.6 ஆம் தேதி அரசியல் புயல் அடிக்கப் போகிறது. இதில் இவர்கள் அனைவரும் காணாமல் போய் விடுவார்கள். தோல்வியை மறைப்பதற்கு வருமான வரி ரைடு நடத்துகிறார்கள். இதன்மூலம் வெற்றியை தடுத்து விடலாம் என கனவு காண்கிறார்கள். இவர்கள் பணத்தை நம்பி களம் காண்கிறார்கள். எனவே நாகைமாலியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி.அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில்வெற்றி பெற செய்யவேண்டும்என்றார்.இந்நிகழ்ச்சியில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், திராவிடர் கழகத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர். 

செய்தி, படங்கள் : காளிதாஸ், சிதம்பரம்

;