election2021

img

அதிமுக அமைச்சர்கள் பணம் கொடுக்க முயற்சி..... மொபைல் செயலி மூலம் பணப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மனு.....

மதுரை:
அதிமுக அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவேஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு நாள் வரையில் மொபைல் செயலி மூலம் பணம் பரிவர்த்தனை செய்யதடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு  அனுப்பியுள்ள புகார் மனு வருமாறு: மதுரையில்ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் கோவைவேலுமணி உள்ளிட்ட பல்வேறு அதிமுக அமைச்சர்கள்தற்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பைத் தொடர்ந்து பணப்பரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் குறிப்பாக கூகுள் பே, பேடிஎம் , அமேசான் பே, போன் பேபோன்ற மொபைல் போன்களில் செயல்படுத்தப்படும் செயலி மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மொபைல் செயலி மூலம்பண பரிவர்த்தனையை ஐந்து (ஏப்ரல் 6 தேதிவரை) நாட்களுக்கு உடனடியாக தடை செய்ய வேண்டும்.  தவறும்பட்சத்தில்  உயர்நீதிமன்றத்தை அணுகி  தடை உத்தரவு பெறநேரிடும்.

;