election2021

img

8 வழி சாலை எதிரொலி... முதல்வருக்கு கருப்புக் கொடி....

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக முதல்வர் வருகையின் போது, காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி விவசாயிகள் கருப்புக்கொடி காண்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு எந்தவொரு நல்ல திட்டத்தையும் செய்யாமல் எப்படி ஓட்டுக் கேட்டு வரலாம் என அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பல இடங்களில் மக்கள் விரட்டி அடித்து வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, செங்கம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வர் வருகையின் போது, காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி விவசாயிகள் கருப்புக்கொடி காண்பித்துள்ளனர்.எட்டு வழிச் சாலை அமைக்கக் கூடாது என விவசாயிகள் பல கட்ட போராட்டம் நடத்தி வந்த நிலையில், போராட்டம் குறித்து எந்தவித பதிலும் கூறாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக அரசை கண்டிக்கும் வகையில், மண்மலை கிராமத்தில் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் முதல்வர் எடப்பாடி செல்லும் வழியில் அவரது வாகனத்திற்கு கருப்புக்கொடி காண்பிக்க முயற்சித்தனர்.

அப்போது, கருப்புக்கொடி ஏந்தி சாலைகளில் ஊர்வலமாக வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அதிகமாக எட்டு வழிச் சாலையால் பாதிக்கும் தொகுதியிலேயே வந்து தமிழக முதல்வர் பிரச்சாரம் செய்வது தங்களுக்கு வேதனை அளிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, செங்கம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வர் வருகைக்கு திங்களன்று ஒரே நாளில் இரண்டு இடங்களில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி கருப்புக்கொடி காண்பித்தனர்.

;