election2021

img

509 சதவீதம் அதிகரிப்பு... ஓபிஎஸ் சொத்துக் குவிப்பு தமிழக மக்கள் அதிர்ச்சி....

தேனி:
கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு 509 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற தகவல், தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், போடி அதிமுக வேட்பாளர் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இத்தொகுதியில் போட்டியிட கடந்த 12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அப்போது சொத்து பட்டியலை தாக்கல் செய்யவில்லை. அவர் எப்போது சொத்து பட்டியலை தாக்கல் செய்வார் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் திங்களன்று இவர் சொத்து கணக்கு காட்டினார்.அதன்படி, ஓபிஎஸ் 2 வங்கி கணக்குகளிலும் டெபாசிட்டாக ரூ.11 லட்சத்து 42 ஆயிரத்து 698 உள்ளது. அவரது மனைவி விஜயலட்சுமி பெயரில் ரூ.23 லட்சத்து 98 ஆயிரத்து 824 உள்ளது. ஓபிஎஸ் பெயரில் 3 கார்கள் ரூ.48 லட்சத்து 85 ஆயிரத்து 424 மதிப்பிலும், இவரது மனைவி விஜயலட்சுமி பெயரில் 2 கார்கள் ரூ.43 லட்சத்து 34 ஆயிரத்து377 மதிப்பிலும் உள்ளன. ஓபிஎஸ் பெயரில் 16 கிராம் தங்கம், மனைவி பெயரில் 200 கிராம் தங்கம் உள்ளன. ஓபிஎஸ்சின் அசையும் சொத்தின்மொத்த மதிப்பு ரூ.61 லட்சத்து 19ஆயிரத்து 162, அவரது மனைவி பெயரில் ரூ.4 கோடியே 57 லட்சத்து 52 ஆயிரத்து 425 உள்ளன.

அசையா சொத்துகள்: ஓபிஎஸ் தனது மனைவி பெயரில் பெரியகுளம் தென்கரை கிராமத்தில் 26 ஏக்கர் 3 சென்ட் நிலம், தாமரைக்குளம் பிட் 2ல் 5 ஏக்கர் 34 சென்ட் நிலம் உள்பட மொத்தம் 56 ஏக்கர் 41 சென்ட் நிலங்கள் உள்ளன. மற்றும் மனைவி பெயரில் வீடுகள் உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 63 லட்சத்து 75 ஆயிரத்து 106 ஆகும். வங்கி, நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன் ஓபிஎஸ்ரூ.65 லட்சத்து 55 ஆயிரத்து 411, மனைவி பெயரில் ரூ.2 கோடியே6 லட்சத்து, 89 ஆயிரத்து 746 உள்ளன. மொத்தமாக 2 பேருக்கும் ரூ.2 கோடியே 72 லட்சத்து 45 ஆயிரத்து 157 கடன் உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 82 லட்சத்து 46 ஆயிரத்து 693 ஆகும். இதில் கடன் மதிப்பை கழித்தால், மீதி ரூ.5 கோடியே 10 லட்சத்து ஆயிரத்து 536 ஆகிறது.

2011 தேர்தலில்...
போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2011 தேர்தலில் போட்டியிட்டபோது, தாக்கல் செய்த சொத்து மதிப்பு விபரத்தின் படி, அசையும் சொத்து: ரூ.25 லட்சத்து 67 ஆயிரத்து 174. அசையா சொத்து: ரூ.29 லட்சத்து 83 ஆயிரத்து 535. மொத்த மதிப்பு ரூ.55 லட்சத்து 50 ஆயிரத்து 709. இதேபோல், 2016 தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த சொத்து விபரம்: அசையும் சொத்து: ஓ.பன்னீர்செல்வம் - ரூ.33 லட்சத்து 20 ஆயிரத்து 529. இவரது மனைவி விஜயலட்சுமி - ரூ.22 லட்சத்து 44 ஆயிரத்து 545. நகை - மொத்தம் 216 கிராம் தங்கம். 2 கார்கள். அசையா சொத்து: ஓ.பன்னீர்செல்வம் பெயரில் எதுவும் இல்லை. மனைவி விஜயலட்சுமி பெயரில் ரூ.98 லட்சம். மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 53 லட்சத்து 65 ஆயிரத்து 74 ஆகும்.

 ஆனால் தற்போது 2021 தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள அசையும், அசையா சொத்துகள் கடந்த 2016 தேர்தலை ஒப்பிடும்போது 509 சதவீதம் அதாவது 5 மடங்கும், 2011 தேர்தலோடு ஒப்பிடும்போது தற்போது 10 மடங்கும் உயர்ந்துள்ளது.இந்த விபரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவ்வளவு சொத்து சேர்த்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

;