election2021

img

50 ஆயிரத்திற்கு ஆசைப்படும் ‘428’

கடந்த தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றது அவரது பாணியில் கூறுவதானால் “கடவுளின் கருணை, அம்மாவின் கருணை” அதைத் தவிர வேறொன்றுமில்லை. மூன்றாவது இடத்திற்கு வந்தவர் மதிமுக-வைச் சேர்ந்த விநாயகா ரமேஷ். இவர் பெற்ற வாக்கு 28,512. கடம்பூர் ராஜூக்கு பிரச்சாரம் ஜெயலலிதா செய்தும் கூட அவரால் ஆயிரம் வாக்குகள் கூட வித்தியாசம் காட்ட முடியவில்லை. இந்த நிலையில் திமுக, மதிமுக  தவிர சிபிஐ, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் இந்தத் தொகுதியில் செல்வாக்கு பெற்ற கட்சிகள் தான்.இந்தநிலையில் கோவில்பட்டியில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ, “ 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்” என முழங்கினார். இவர் பேசியது அத்தைக்கு மீசை முளைத்த கதையைப் போலிருந்தது. மேலும் அவர் பேசுகையில், “தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் நிலை உருவாகும்” என்று ஆரூடம் கூறினார்.  அதற்கு பாஜகதான் காரணம் என ஐஸ் கட்டிகளை தூக்கி அவர்களது தலையில் வைத்தார். பாஜகவும்-அதிமுகவும் இரண்டு தண்டவாளங்களைப் போன்றது என்றார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இரண்டு தண்டவாளங்கள் எங்கே இணைந்துள்ளன என்பதை கடம்பூர் ராஜூ-வின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம். கடம்பூர் ராஜூ (அதிமுக) 64,514 (38,96 சதவீதம்)சி.சுப்பிரமணியன் (திமுக) 64,086 (38,70) சதவீதம்இருவருக்குமான வாக்கு வித்தியாசம் வெறும் 428

;