election2021

img

2 கோடி ரூபாய் வாடகைக்கு வீடு பிடித்த கொரோனா தடுப்பூசி முதலாளி...

 புதுதில்லி:
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமாக ‘சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா’ (Serum Institute of India) உள்ளது. இதன் தலைவர் ஆதார் பூனவல்லா. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் இவரும் ஒருவர்.இந்நிலையில், ஆதார் பூனவல்லா உலகின் மிகவும் காஸ்ட்லியான குடியிருப்பு பகுதி என்று கூறப்படும் லண்டன் ‘மேபேர்’ (Mayfair) பகுதியில் இருக்கும் பிரம்மாண்ட மாளிகையில் குடியேறியு உள்ளார்.   ‘கோவிஷீல்டு’ எனப்படும் கொரோனா தடுப்பு மருந்து விற்பனை வாயிலாக மட்டும் ‘சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா’ சுமார் 4 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சம்பாதிக்கும் எனக் கணிப்புகள் நிலவி வரும் நிலையில் இந்நிறுவனத் தலைவர் ஆதார் பூனவல்லா வாரம் 69,000 டாலர் அதாவது வாரம் 50 லட்சம் ரூபாய்- மாதம் 2 கோடி ரூபாய் வாடகை கொண்ட பிரம்மாண்ட மேன்ஷனுக்கு குடியேறியுள்ளார். 

சுமார் 25,000 சதுரடி கொண்ட இந்த பிரம்மாண்ட மாளிகை போன்ற வீட்டை ஆதார் பூனவல்லா போலந்து நாட்டின் பில்லியனர் டொமினிகா குல்க்சிக்கி-யிடமிருந்து வாடகைக்குப் பெற்றுள்ளார். ஆதார் பூனவல்லா தற்போது குடியேறியுள்ள ‘மேபேர்’ பகுதியில்தான் உலகின் பல முன்னணி பணக்காரர்களும், பில்லியனர்களும் உள்ளனர். குறிப்பாக ‘போன்ஸ் 4u’ நிறுவனத்தின் தலைவர் ஜான் காட்வெல் போன்ற பல அரசியல்தலைவர்கள் மற்றும் பணக்காரர்களின் பிள்ளைகள் வசிக்கின்றனர்.

;