election2021

img

1500 ரூபாயும் பாஜக முருகனும்....

திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார மாநாட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு, அவர்களது உழைப்புக்காக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். திமுக தேர்தல் அறிக்கையிலும் இது இடம்பெற்றுள்ளது.

ஸ்டாலினின் அறிவிப்பு வெளியான உடனேயே மார்ச் 8 அன்று “திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆயிரம் ரூபாய் திட்டம் சாத்தியம் இல்லாத திட்டமாகும்” என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.ஆனால் அதேநாளில், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்” என்று அதிமுக தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிவிப்பாக வெளியிட்டார்.

ஸ்டாலின் கூறிய ஆயிரம் ரூபாயே சாத்தியமில்லை என்று கூறிய பாஜக முருகன், எடப்பாடி பழனிசாமி கூறிய 1500 ரூபாயைப் பற்றி இன்னும் வாய் திறக்கவில்லை. இதுபற்றி சமூக ஊடகங்களில் விமர்சித்து வரும் ஆர்வலர்கள், திமுகவை விமர்சிப்பதற்கு முன்பு, நானும் அப்படித்தான் சொல்லப்போகிறேன், அதைவிட அதிகமாக சொல்லப்போகிறேன் என்று பாஜக முருகனுக்கு எடப்பாடி தகவலை கசியவிட்டிருந்தால் முருகன் பேசாமல் இருந்திருக்கக் கூடும் என்று நையாண்டி செய்து வருகிறார்கள். 

;