election2021

img

11,500 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை.... தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்....

சென்னை:
தமிழகத்தில் உள்ள 88 ஆயிரதது 937வாக்குச் சாவடிகளில் சுமார் 11, 500 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்ற தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 55 ஆயிரத்து 102 வாக்கு பதிவு எந்திரமும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு யூனிட்டுகளும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 807 ஒப்புகைச்சீட்டு எந்திரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு 100 வாக்குச் சாவடிக்கும் 30 விழுக்காடு அளவிற்கு கூடுதல் எந்திரங்கள் தயார் நிலையில் இருக்கும். இவை அனைத்தும் இரண்டு முறை பரிசோதித்த பிறகே வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டுசெல்லப்படும். எந்திரங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்று எந்திரம் பயன்படுத்தப்படும் அல்லது பொறியாளர்கள் அவற்றை சரி செய்வார்கள்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் பயிற்சிக்கு வரும் போது தேர்தல்அலுவலர் வாயிலாக 12, 12ஏ விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகிறது. அவர்கள் அங்கேயே தபால் வாக்கு அளிக்கலாம் அல்லது அஞ்சலகம் மூலம் வாக்களித்து அனுப்பலாம். இதுவரை ஒரு லட்சத்து 85ஆயிரத்து 57 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 667 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட வேண்டி உள்ளது. 89 ஆயிரத்து 185விண்ணப்பங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 537, அதில் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகள் 10,830 எனவும்அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அதிகரிக்கக் கூடும். வருமான வரித்துறை சோதனையில் மொத்தம் 82 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 14.47 கோடி ரூபாயும், செங்கல்பட்டில் 18.75 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரைக்கும் பெறப்பட்ட 3,464 புகாரில்2,580 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்
பட்டுள்ளது. பிரச்சாரத்திற்கு 15,497 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நட்சத்திரப் பேச்சாளர்கள் 832 பேருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 11,186 குற்றவாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமம் பெற்ற 18,723 துப்பாக்கிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்துமாவட்ட தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக ஐபிசி அல்லாத சிஆர்பிசி-யின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பார்கள். அதன்பிறகு தலைமை தேர்தல் ஆணையருக்கு அறிக்கையை அனுப்புவார்கள். அதனை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

;