election2021

img

தலசேரி தொகுதியில் யாருக்கு ஆதரவு..? தொண்டர்களைக் குழப்பி எடுத்த கேரள பாஜக தலைவர்கள்....

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தலசேரி தொகுதிக்கு பாஜக சார்பில் என். ஹரிதாஸ் வேட்புமனு செய்திருந்தார். இதேபோல குருவாயூர் தொகுதியில் நிவேதிதா சுப்பிரமணியன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், வேட்புமனு பரிசீலனையின் போது, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் கையொப்பம் இல்லை என்று கூறிஇவர்கள் இரண்டு பேரின் மனுக்களையும் தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். இதற்கு எதிராக பாஜக உயர் நீதிமன்றத்தை நாடியும் பயனில்லாமல் போனது. இதனால், தேர்தலுக்கு முன்பே2 தொகுதிகளை பாஜக இழந்தது. வேறுவழியில்லாததால், தலசேரியில் ஏதாவதொரு சுயேட்சை வேட்பாளரை ஆதரிப்பதென்று தீர்மானித்த பாஜக, ஆரம்பத்தில், இந்திய காந்தியன் கட்சி சார்பில் போட்டியிடும் நசீரைஆதரிப்பது என்று பாஜக முடிவெடுத்தது.

ஆனால், பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரனோ, ‘தலசேரி தொகுதியில் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதை தொண்டா்களே சொந்தமாக முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்னதாக திங்களன்று திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, கட்சியினரை பரபரப்புக்கு உள்ளாக்கினார். ஆனால், மத்திய அமைச்சர் வி.முரளீதரன் “தலசேரி தொகுதியில்நசீரை ஆதரிப்பது என்று கட்சிதான் ஏற்கெனவே முடிவெடுத்து விட்டதே...” என்று கூறினார்.இதில் தொண்டர்களின் நிலைதான் பரிதாபமாகி விட்டது. மாநிலத் தலைவர் சொல்வதைக் கேட்பதா, மத்திய அமைச்சர் சொல்வதைக் கேட்பதா? தங்களுக்குள்ள ‘லட்சக்கணக்கான’ வாக்குகளை யாருக்குச் செலுத்துவது? என்று தெரியாமல் புலம்பித் தவித்து விட்டனர். இதற்குள் வாக்குப்பதிவும் நடந்து முடிந்து விட்டது.தலசேரி தொகுதி, கடந்த 1977 முதல்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;