election2021

img

சமூகவலைதள பிரச்சாரமும் தவிர்க்க முடியாததாகி விட்டது.... மக்களுடன் தொடர்பில் இருப்பதே கேரள கம்யூனிஸ்டுகளின் பலம்.... டாக்டர் சிவதாசன் பேட்டி....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் தகவல் தொழில்நுட் பங்களைப் பயன்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஏனையமுதலாளித்துவ கட்சிகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடுகொடுத்து வருகிறது.

சமூகவலைதளங்களில், கேரள முதல்வர் பினராயி விஜயனை 12 லட்சத்து 70 ஆயிரம் பேர் பின்தொடர்கின் றனர். நிதித் துறை அமைச்சராக இருக்கும் தாமஸ் ஐசக்கை 7 லட்சத்து 25 ஆயிரம் பேரும், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜாவை 8.5 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.இதேபோல் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலாவை 12 லட்சம் பேரும், காங்கிரஸ் எம்.பி.சசிதரூரை 14 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர். பெண்கள் உள்ளிட்ட இளம்தலைமுறை அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமை பொறுத்தவரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் முதலிடத்தில் உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியை 2 லட்சத்துக்கு 63 ஆயிரம்பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். அதேநேரம் காங்கிரஸை 48 ஆயிரம் பேரும், பாஜக-வை 21 ஆயிரம் பேரும் மட்டுமே பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், புதிய தலைமுறையினரே அதிகமானோர் சமூகவலைதளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதால், அவர்களின் ஆதரவு கேரளசட்டப்பேரவைத் தேர்தலில் உறுதியாகஎதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த வகையிலான பிரச்சாரத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது என்று கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் வி. சிவதாசனிடம் கேள்விஒன்று எழுப்பப்பட்டு உள்ளது.அதற்கு, ‘இந்த தேர்தலில் வாட்ஸ்அப்பில் நிறைய போலி செய்திகள் வந்தன. அதை உடைக்கவே நாங்கள்அதிகநேரம் வேலை செய்தோம். எனினும், நேரடி பிரச்சாரத்தையும், மக் களை நேரடியாக சந்திப்பதையுமே பெரிதும் நம்புகிறோம். ஆனால், இன்றைய கால ஓட்டத்தில் சமூகவலைதள பிரச்சாரமும் முக்கியமானது’’ என்று பதிலளித்துள்ளார்.

;