election2021

img

கேரள சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரி அணிக்கு ஆதரவு... என்சிபி கட்சியில் இணைந்தார் பி.சி. சாக்கோ...

புதுதில்லி:
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மூத்ததலைவர் பி.சி. சாக்கோ, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு ஆதரவு அளிக் கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்றும், நேர்மையான காங்கிரஸ்காரனாக இருப் பது கடினம் எனவும் கூறி,அக்கட்சியின் மூத்த தலைவரும் திருச்சூர் முன்னாள் எம்.பி.யுமான பி.சி. சாக்கோகட்சியில் இருந்து விலகினார். அவர் பாஜகவில் இணையலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்து விட்டபி.சி. சாக்கோ, தற்போது சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். சரத்பவார் உடனான சந்திப்பிற்குப் பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியையும் சாக்கோ சந் தித்து பேசினார்.பின்னர், செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்த சாக்கோ, ‘‘கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு எனதுஆதரவை தெரிவித்துள் ளேன். அந்த கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்யஉள்ளேன்’’ என்று தெரிவித் துள்ளார்

;