election2021

img

கேரளத்தில் 77 முதல் 85 இடங்கள் இடதுசாரி அணிக்கு கிடைக்கும்.... மீண்டும் மீண்டும் உறுதிசெய்யும் ஊடகங்கள்...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் இடதுசாரிகள் 77 முதல் 85 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைப்பார்கள் என ஏபிபி- சிவோட்டர் (ABP -CVoter) கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.140 இடங்களைக் கொண்ட கேரளத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும் (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (UDF) இடையே போட்டி நிலவுகிறது.

வழக்கமாக, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கேரளத்தில் ஆட்சி மாறுவது வாடிக்கை. குறிப்பாக, 1977-க்குப் பிறகு சுமார் 45 ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. ஆனால், இம்முறை பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இத்தேர்தலில் இடதுசாரிகள் 77 முதல் 85 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதேநேரம் காங்கிரஸ் கூட்டணி 54 முதல் 62 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டு உள்ளது. பாஜக எவ்வளவு முயன்றாலும் அந்தக் கட்சிக்கு 2 இடங்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;