election2021

img

ஊன்றுகோலின் உதவியுடன் போராடும் போராளி....

லிண்டோ ஜோசப்...ஒரு தடகள வீரர்!

லிண்டோ, நடுத்தர தொலைவு ஓட்டப் பந்தயத்தில் மாநில சாம்பியன்.

அந்த இளைஞர். இன்று தனது வலது காலை தரையில் ஊன்றி நிற்பதற்குப் பதில் ஊன்றுகோலின் உதவியுடன் தான் நிற்கிறார்.

தடகள வீரரான லிண்டோவின் கையில் எப்படி ஊன்று கோல் வந்தது என்று தானே எண்ணுகிறீர்கள்?

அதற்குப் பதிலாக பொதுநலத் தொண்டின் வேதனை மிகுந்த கதை ஒன்று உள்ளது.

கேரளத்தைப் புரட்டிப் போட்ட பெருவெள்ளப் பாதிப்பின் போது...புற்றுநோய் பாதித்த ஒருவரை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்... ஆம்புலன்ஸ் இருக்கிறது. ஆனால் அதனை ஓட்டிச் செல்ல ஓட்டுனர் இல்லை.
தானே ஆம்புலன்சை ஓட்டிச் செல்வது என்று முடிவெடுத்து.

ஆம்புலன்சில் அந்த நோயாளியையும் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை நோக்கிச் செல்லும் போது எதிரில் வேகமாக வந்த டிப்பர் லாரி ஆம்புலன்ஸ் மீது மோதுகிறது.விபத்தில் குற்றுயிரும் குலையுயிருமாக நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த 28 வயது இளைஞன் பின்னர் வாழ்க்கைக்கு திரும்பியது, உணர்வற்ற வலது காலுடனும் நடப்பதற்கு உதவியாக கையில் ஒரு ஊன்று கோலுடனும், காணும் யாரையும் மனவேதனை கொள்ள வைக்கும் நிலையில்!

கொரோனா காலத்தில் முதல்வரின் நிவாரண நிதிக்காக, பழைய பயனில்லாத இரும்புப் பொருள்கள், பேப்பர் போன்றவற்றை சேகரித்தல், மீன் வியாபாரம் செய்தல் போன்ற செயல்களின் மூலமாக நிதி திரட்ட ஊன்றுகோலுடன் அங்கும் இங்கும் அலைந்து பம்பரமாக வேலை செய்த அந்த இளைஞனின் பொது பொதுநலன் கருதிய செயல்பாட்டை பார்க்கும் யாருக்கும் விழியின் ஓரமாக ஒரு துளி கண்ணீராவது வராமல் இருந்திருக்க முடியாது.

தளர்ந்து போன காலுடன்... ஆனால் தனக்கு ஏதும் நிகழாதது போல் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்காக போராடும் அந்த இளைஞனின் மனதில் கம்யூனிசம் என்ற நெருப்பு, அவர் இயங்குவதற்கான சக்தியை  ஊற்றுப் பெருக்கடுத்து உணர்வாகக் கொடுத்துக் கொண்டே இருந்தது...தோழர். லிண்டோ ஜோசப் போன்ற தோழர்களின் தியாகமே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடித்தளம்...!  

எனவே தான் கேரள  இடது ஜனநாயக முன்னணி சார்பில் திருவம்பாடி தொகுதியில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளராக தோழர். லிண்டோவைக் களமிறங்கியுள்ளது.வாலிபர் சங்க மாவட்டக் குழு உறுப்பினரான தோழர். லிண்டோ ஜோசப், கூடரஞ்ஞி கிராமப் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்து வருகிறார். திருவம்பாடி தொகுதியில் உள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு குரலெழுப்ப இடது ஜனநாயக முன்னணியின் சார்பில் லிண்டோ ஜோசப் சட்டசபைக்கு செல்வது உறுதி என்று திருவம்பாடி தோழர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

;