election2021

img

பினராயி விஜயனை எதிர்த்துப் போட்டியிட விரும்பவில்லை.... காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் பகிரங்க அறிவிப்பு...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரும்; கேரள அரசியல் வரலாற்றில் பினராயி விஜயன் புதிய வரலாறு படைப்பார் என்றுஊடகங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன.

முதல்வர் பினராயி விஜயனும், கண்ணூர் மாவட்டம் தர்மடம் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கலை முடித்து விட்டு, மிகுந்த உற்சாகத்துடன் தேர்தல் பிரச்சாரத் தைத் துவங்கி விட்டார். மார்ச் 31 வரை மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்துவிட்டு, சொந்தத் தொகுதியான தர்மடத்திற்குஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகேவருவதாக திட்டம் வைத்திருக் கிறார்.ஆனால், முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் - வேட்புமனுத் தாக்கலுக்கு மார்ச் 19கடைசி நாள் எனும் நிலையில், மார்ச் 18 வரை வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை.கண்ணூர் தொகுதியின் தற்போதைய எம்.பி.யும், கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவருமான கே.சுதாகரனையே, தர்மடம் தொகுதியில் போட்டியிட வைப்பதற்கு மாநிலத் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசிப்பார்த்தார். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னித்தலா ஆகியோரும் தொடர்ந்து பேசிவந்தனர்.கூட்டணிக் கட்சியினரும்கூட அவரிடம் கோரிக்கை வைத்துப் பார்த்தனர். காங்கிரஸ் வென்றால் முதல்வர் பதவி உங்களுக்குத்தான் என்றும் அவருக்கு ஆசை காட்டப்பட்டது. இப்படியே நாட்கள் கடந்தநிலையில், தர்மடம் தொகுதியில் பினராயி விஜயனை எதிர்த்து நான் போட்டியிட மாட் டேன் என்று பகிரங்கமாகவே கே. சுதாகரன் தற்போது அறிவித்துள்ளார்.
“பினராயிக்கு எதிராகதன்னை நிற்கச் சொன்னதற்காக கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இந்தச் சூழல் தனக்குசாதகமாக இல்லாத நிலையில்போட்டியிட விரும்பவில்லை” என்றும் செய்தியாளர்கள் மத்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

;