election2021

img

இன்னும் 30 ஆண்டுகள் ஆனாலும் கேரளத்தில் பாஜக தேறாது... ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சாபம்

திருவனந்தபுரம்:
“கேரள பாஜக தலைமையின் செயல்பாடுகள் சரியில்லை; இன்னும் 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியால் கேரளத்தில் தேற முடியாது” என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் ‘ஆர்கனைசர்’ வாராந்திர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், பாஜக அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவருமான ஆர். பாலஷங்கர் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பிலும், பாஜகவிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஆர். பாலஷங்கர், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டிற்கு பேட்டி ஒன்றை அளித்துள் ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கேரளத்தின் செங்கன்னூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம். 50 வருடங்களில் நான் கட்சியிடம் கேட்டது இது மட்டும்தான். ஆனால், பாஜகமாநிலத் தலைவர் கே. சுரேந்திரன், மத்திய அமைச்சர் வீ. முரளிதரனுடன் சேர்ந்துகொண்டு, தனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. 50 ஆண்டுகள் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்காகவும், பாஜகவிற்காகவும் உழைத்த எனக்குஇது ஏமாற்றமாக உள்ளது.இந்த தொகுதியில் பாஜக வெற்றிபெறக் கூடாது என்று கட்சித் தலைவர்களே தெளிவாக இருப்பது போலதெரிகிறது. அவர்கள் சிபிஐ(எம்) கட்சிக்கு உதவவே மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். பத்தினம் திட்டா, கொன்னி ஆகிய 2 தொகுதிகளில் சுரேந்திரன் போட்டியிடும் நிலையில், அவர் செங்கன்னூர் தொகுதியை சிபிஐ(எம்) கட்சியுடன் சமரசம் செய்து கொண்டுள்ளார். இடதுசாரிகள் வெற்றி பெறவே கேரள பாஜக உழைக்கிறது.வெற்றி பெறும் சாதகம்தான் வேட்பாளர்களை முடிவு செய்கிறது என்று பாஜக கூறுகிறது. ஆனால் ஆர்த்தோடக்ஸ் கிறித்துவர்கள், நாயர் சர்வீஸ் சொசைட்டி, மற்றும்
எஸ்என்டிபி மற்றும் இஸ்லாமியர் களின் ஒரு பகுதியை சமாளிக்கும் வேட்பாளர்கள் யாரையும் பாஜக நிறுத்தவில்லை. இந்நிலை தொடர்ந்தால் பாஜக அடுத்த 30 ஆண்டுகளானாலும் கேரளாவில் எதையும் உருவாக்க முடியாது.இவ்வாறு ஆர். பாலஷங்கர் தனது ஏமாற்றத்தைக் கொட்டித் தீர்த் துள்ளார்.

;