election2021

img

மலையாள மனோரமாவும் வெற்றியை உறுதி செய்தது... கேரளத்தில் இடதுசாரிகளுக்கு 82 இடங்கள் கிடைக்கும் என தகவல்...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கேரளத்தில் பிரபல நாளிதழான ‘மலையாள மனோரமா’வும் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

ஹிந்தி செய்திச் சேனலான ஏபிபி நியூஸ் (ABP News - CVoter Survey), இந்தோ- ஆசிய செய்தி நிறுவனமான (IANS - CVoter Survey), கேரளத்தைச் சேர்ந்தபிரபல பத்திரிகை ‘மாத்ரூபூமி’ (Mathrubhumi - CVoter survey), ஆங்கிலசெய்தி சேனலான ‘டைம்ஸ் நவ் - சி வோட்டர்’(TimesNow - CVoter survey) ஆகிய அனைத்துமே கேரளத்தில் மீண்டும் இடதுஜனநாயக முன்னணிதான் ஆட்சியமைக் கும்; பினராயி விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் ஆவார் என்று கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டன. குறைந்தபட்சம் 71 முதல் அதிகபட்சம் 91 இடங்கள் வரை இடது ஜனநாயக முன்னணிக்கு கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்புக்கள் கூறியிருந்தன.இந்நிலையில், கேரளத்தின் மற்றுமொரு முன்னணி மலையாள நாளிதழான ‘மலையாள மனோரமா - விஎம்ஆர்’ நிறுவன (Manorama News-VMR pre-pollsurvey) கருத்துக் கணிப்பும் இடது ஜனநாயக முன்னணியின் வெற்றியை உறுதி செய்துள்ளது.

கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 இடங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 77 முதல் 82 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக் கும்; காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 54 முதல் 59 இடங்கள் வரை கிடைக்கும் என்று மலையாள மனோரமா தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு அதிகபட்சம் 3 இடங்கள் வரை கிடைக்கலாம்; அல்லது ஒன்றுமில்லாமல் போகலாம் என்று கூறியுள்ளது.வாக்குகள் அடிப்படையில், இடதுசாரிகள் கூட்டணிக்கு 43.65 சதவிகித வாக்குகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 37.37 சதவிகித வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 16.46 சதவிகித வாக்குகளும் கிடைக்கும்.மற்றவர்கள் 2.52 சதவிகித வாக்குகளைப் பெறுவார்கள் என்று கூறியுள்ள மலையாள மனோரமா, கேரள முதல்வராக யார் வரவேண்டும்..? என்ற கேள்விக்கு பெரும் பான்மையாக 39 சதவிகிதம் பேர் பினராயி விஜயன் பெயரைக் கூறியிருப்பதாகவும், காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டிக்கு 26 சதவிகிதம் பேர்களே ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

;