election2021

img

வாக்குப்பதிவு இயந்திரக் கடத்தல் விவகாரம் எனக்கு தெரியாது.... தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்... அமித்ஷா சொல்கிறார்...

புதுதில்லி:
அசாம் மாநிலத்தின் 2-ஆம் கட்டத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பதர் கண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ் ணேந்து பாலின் காரில் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக தனக்கு உடனடியாக தெரியாது என்று மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தவறு நடந்திருக்கும் பட்சத்தில், நடவடிக்கை எடுப்பதை நாங்கள் தடுக்கமாட்டோம் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு அவர் ‘சுதந்திரம்’ அளித்துள்ளார்.இதுதொடர்பாக அமித் ஷா மேலும்கூறியிருப்பதாவது:

“நான் தென்னிந்தியாவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததால், காரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த விவரங்கள் எனக்குத் தெரியாது. இதுதொடர்பான விவரங்கள் பெறப்படும். தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை. இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மை இருந்தால் தேர்தல் ஆணையம் கட்டாயம் சட்டப்படிகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கண்டிப்பாக தேர்தல் ஆணையம் செயல்படவேண்டும்.” இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.

;