election2021

img

சிஏஏ மூலம் அசாமின் வரலாறு, பண்பாடு மீது தாக்குதல் நடக்கிறது... தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

கவுகாத்தி:
மோடி அரசு தனது குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மூலம் அசாமின் மொழி, வரலாறு மற்றும்கலாச்சாரத்தை தாக்கி அழிக்கப் பார்க்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அசாமில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி (Mahajot) ஆட்சிக்கு வந்தால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.சில்சார், திமா ஹசாவோ மலை மாவட்டத்தின்ஹப்லாங் மற்றும் கர்பி, அங்லாங் மலை மாவட்டத்தின் போகாஜன் ஆகிய இடங்களில் செவ்வாயன்று பெய்த கடும் மழை காரணமாக, திட்டமிட்டபடி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள முடியாத ராகுல் காந்தி, அசாம் மக்களுக்காக தனது பேச்சு அடங்கிய வீடியோ ஒன்றைவெளியிட்டார். அப்போது சிஏஏ விவகாரத்தில் காங்கிரசின் நிலையை அவர் தெளிவுபடுத்தினார்.

“அரசியலமைப்பின் பிரிவு 244ஏ, அசாமில் சில பழங்குடிப் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு தன்னாட்சி அரசை உருவாக்குவது மற்றும் உள்ளூர்சட்டமன்றம் அல்லது அமைச்சர்கள் சபை அல்லதுஇரண்டையும் உருவாக்குவது குறித்து விவாதிக்கிறது. ஆனால், 244ஏ பிரிவை பாஜக அகற்ற முயல்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையில்- இடதுசாரிகள், போடோலாந்து மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால், சிஏஏ-வை அமல்படுத்துவது இல்லை என்று நாங்கள் தெளிவாக உள்ளோம். நாங்கள் ஐந்து உத்தரவாதங்களுடன் அசாமை முன்னேற்றம் மற்றும் வளமான பாதையில் கொண்டு செல்வோம். முதல் உத்தரவாதம் நாங்கள் சிஏஏ சட்டத்தைசெயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். ஏனெனில் அசாம் மக்களின் மொழி, வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மீது சிஏஏ தாக்குதல்நடத்துகிறது. இரண்டாவதாக ஐந்தாண்டுகளில் ஐந்து லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். இதேபோல தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 365 ஆக நிர்ணயிக்கப்படும். அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ஒவ்வொருவீட்டின் இல்லத்தரசிகளுக்கும் உரிமைத் தொகையாக மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.இவ்வாறு ராகுல் காந்தி ஆடியோவில் கூறியுள்ளார்.

முன்னதாக, நாட்டின் வளர்ச்சிக்கும், பிரதமர் மோடியின் வாய்ஜாலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அசாம் மக்கள் புரிந்து கொண்டதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்த ராகுல் காந்தி,முடிந்தால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக என்னசெய்தோம்? என்பதை பாஜக தலைவர்கள் விளக்கட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.

;