election2021

img

அசாம் கலாச்சாரத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது... ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

கவுகாத்தி:
அசாம் மாநில மக்களின் கலாச்சாரத்தை அழிக்க, பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அசாமில் ஆளும் பாஜக - அசாம் கணபரிஷத் கூட்டணி அரசுக்கு எதிராக, காங்கிரஸ், இடதுசாரிகள், போடோலாந்து மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 

இந்நிலையில், இந்தக் கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சனிக்கிழமையன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார். அப்போது “ஒவ் வொரு மாநிலத்துக்கும் தனி கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. அசாமில் 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.நாங்கள் அசாம் கலாச்சாரத் திற்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொண்டோம். மக்கள்ஒற்றுமையாக இருந்தார்கள். ஆனால் பாஜக ஆட்சியில்ஒற்றுமை சீர் குலைக்கப்பட்டுள்  ளது” என்று குற்றம் சாட்டினார்.மேலும், “அசாம் மாநிலத் திற்கு என்று தனி அடையாளம் உள்ளது. அது அழியும் நிலையில் இருக்கிறது. அதை காப் பாற்ற பாஜக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, அசாம்கலாச்சாரத்தை பாஜக அழிக்கபார்க்கிறது” என்று தெரிவித்தார். 

;